இமாச்சலில் ஆட்சியை பறிகொடுத்தது காங்கிரஸ்! பாஜக முதல்வர் வேட்பாளர் தோல்வி!
ஹிமாச்சல பிரதேச தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமல் தோல்வி அடைந்து உள்ளார்.
சிம்லா: ஹிமாச்சல பிரதேச தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமல் தோல்வி அடைந்து உள்ளார். ஆனால் பாஜக கட்சி அங்கு அபாரமாக வெற்றிபெற்று இருக்கிறது.
ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்த மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் தற்போது பாஜக 44 தொகுதிகளில் அபாரமாக வெற்றி பெற்று இருக்கிறது. காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெற்றிபெற்று உள்ளது.

இதன் மூலம் ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது. பாஜக விரைவில் ஆட்சி அமைக்க இருக்கிறது.
ஆனால் ஹிமாச்சல பிரதேச தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரேம் குமார் துமல், தான் போட்டியிட்ட சுஜான்பூர் தொகுதியில் தோல்வி அடைந்து இருக்கிறார். பிரேம் குமார் துமல் மொத்தம் 12,836 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரஜிந்தர் ராணா 15,656 வாக்குகள் பெற்று உள்ளார்.
இதையடுத்து ரஜிந்தர் ராணா, பிரேம் குமாரை விட 2,820 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். இதனால் பாஜக கட்சியில் முதல்வர் பதவிக்கு புதிய நபர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications