லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பா.. கர்நாடகாவின் எத்தனையாவது முதல்வர் தெரியுமா?
கர்நாடக மாநிலத்தின் 23வது முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்கிறார்.
Recommended Video

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் 23வது முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்கிறார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியும் பெரும்பான்மை கிடைக்காததால் பாஜக ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ஜேடிஎஸ் தலைமையில் ஆட்சி அமைய காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து கூட்டணி அறிவித்தது. இந்நிலையில் எடியூரப்பாவும், குமாரசாமியும் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.

அழைப்பு விடுத்த ஆளுநர்
இதனால் ஆளுநர் யாரை ஆட்சியமைக்க அழைப்பார் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. இந்நிலையில் கர்நாடகத்தில் முதல்வராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா நேற்றிரவு அழைப்பு விடுத்தார்.

15 நாள் அவகாசம்
ஆளுநர் மாளிகை இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 15 நாள் அவகாசமும் அளித்தார்.

ஆளுநருக்கு எதிர்ப்பு
இதனால் கர்நாடாக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

விடிய விடிய விசாரணை
எடியூரப்பா பதவியேற்பதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மஜத உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக ஏற்கப்பட்டு நள்ளிரவு 1.45 மணிக்கு நீதிபதிகள் ஏ.கே.சிக்கிரி, அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.போப்தே ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

தடைவிதிக்க மறுப்பு
அப்போது கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இரண்டரை மணிநேரமாக நடைபெற்ற காரசார வாதங்களுக்கு பிறகு உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்தது.

உச்சகட்ட பாதுகாப்பு
இதைத்தொடர்ந்து பாஜக முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா இன்று காலை 9.30 மணிக்கு பதவியேற்கிறார். இதற்காக மாநிலம் முழுவதும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

23வது முதல்வர் எடியூரப்பா
லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பா கர்நாடகாவின் 23வது முதல்வர் ஆவார். ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் அவர் பதவியேற்கிறார். அவருடன் கோவிந்த காரஜோலா, ஸ்ரீராமலு, ஈஸ்வரப்பா, ஆர்.அசோக்கும் பதவியேற்கலாம் என கூறப்படுகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications