மிசோராமில் நடந்த கவுன்சில் தேர்தல்.. கூட்டணி அமைத்து அதிகாரத்தை கைப்பற்றும் பாஜக- காங்கிரஸ்!
மிசோராமில் உள்ள தன்னாட்சி பொருந்திய சக்மா மாவட்ட கவுன்சிலை பாஜக கட்சியும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து நிர்வாகம் செய்ய இருக்கிறது.
மிசோரம்: மிசோராமில் உள்ள தன்னாட்சி பொருந்திய சக்மா மாவட்ட கவுன்சிலை பாஜக கட்சியும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து நிர்வாகம் செய்ய இருக்கிறது. அங்கு நடந்த கவுன்சில் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால் அந்த கட்சிகள் இந்த முடிவை எடுத்து இருக்கிறது.
மிசோராமில் உள்ள சக்மா இன மக்களுக்கான இயங்கும் தன்னாட்சி பொருந்திய கவுன்சில்தான் சக்மா மாவட்ட தன்னாட்சி கவுன்சில். அம்மாநில அரசுக்கு நிகரான பலம் கொண்ட இந்த கவுன்சிலில் வெற்றிபெறும் கட்சியே பெரும்பாலும் மாநில தேர்தலிலும் வெற்றிபெறும். மிசோராமில் இதுபோல் மூன்று தன்னாட்சி கவுன்சில்கள் மட்டுமே இருக்கிறது.

இந்த சக்மா கவுன்சிலுக்காக சென்ற வாரம் தேர்தல் நடந்தது. மொத்தம் 20 தொகுதிகளுக்கு இந்த தேர்தல் நடந்தது. அதில் 19 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முறைகேடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு தொகுதிக்கான முடிவு வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்போது 19 தொகுதியில் பாஜக 5 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 6 தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது. மிசோ தேசிய முன்னணி கட்சி 8 இடங்களில் வெற்றிபெற்று இருக்கிறது. ஆனால் அங்கு அதிகாரத்தை கைப்பற்ற 11 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
இதனால் தற்போது பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது. இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து அங்கு அதிகாரம் செலுத்த உள்ளது. மிசோ தேசிய முன்னணி கட்சி இரண்டு கட்சிகளுடன் கைகோர்க்க முன்வராத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் இதற்கு பாஜக தேசிய மேலிடம் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மிசோரம் பாஜக நிர்வாகிகள் கட்சியைவிட்டு நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications