எஸ்.ஐ.யை சரமாரியாக அடித்து வெளுத்த பாஜக கவுன்சிலர்.. அதிர்ந்து போன மீரட்!
Recommended Video

மீரட்: உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் பாஜக கவுன்சிலர் ஒருவர் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை சரமாரியாக அடித்து உதைத்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பாஜக கவுன்சிலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மீரட்டைச் சேர்ந்தவர் முனீஷ் குமார். லோக்கல் கவுன்சிலர், பாஜகவைச் சேர்ந்தவர். இவருக்குச் சொந்தமாக ஒரு ஹோட்டல் உள்ளது. அந்த ஹோட்டலுக்கு சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் பெண் வக்கீலுடன் வந்துள்ளார். வந்த இடத்தில் வெயிட்டருக்கும் வக்கீலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதைப் பார்த்து விரைந்து வந்த பாஜக கவுன்சிலர் சப் இன்ஸ்பெக்டரை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்து அங்கிருந்தோர் அதிர்ந்து நின்றனர். ஒரு கட்டத்தில் முனீஷ் அடித்த அடியைத் தாங்க முடியாமல் சப் இன்ஸ்பெக்டர் கீழே விழுந்து விட்டார்.
இதைப் பார்த்த அந்தப் பெண் வக்கீல் டேபிளில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வெயிட்டர் மீது வீசி எறிந்தார். இதனால் மேலும் பரபரப்பாகியது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது வைரலாகியுள்ளது. விவகாரம் காவல் நிலையம் வரை போய் தற்போது கவுன்சிலர் முனீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
#WATCH: BJP Councillor Manish thrashes a Sub-Inspector who came to his (Manish's) hotel with a lady lawyer and got into an argument with a waiter. The councillor has been arrested. (19.10.18) (Note- Strong Language) pic.twitter.com/aouSxyztSa
— ANI UP (@ANINewsUP) October 20, 2018
ஹோட்டல் என்றால் முன்பெல்லாம் சாப்பாடுதான் அதிரடியாக இருக்கும்.. இப்பெல்லாம் ஒரே அடிதடிதான்.. சென்னை டூ மீரட் எல்லாம் ஒரே கதைதான் போல!
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications