என்ன நடக்குது கர்நாடகாவில்... பதவியேற்பு தொடர்பான டுவிட்டை பாஜக டெலிட் செய்தது!
கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும்படி எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக பாஜக டுவிட் செய்தது. அதை நீக்கியுள்ளது.
பெங்களூரு: கர்நாடகா முதல்வராக எடியூரப்பா நாளை காலை பதவியேற்பார் என்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியை, பாஜக நீக்கியுள்ளது.
கர்நாடகாவில் தேர்தலில் நடந்த குழப்பங்களால், யார் ஆட்சியை அமைப்பார்கள் என்பதில் பெரும் குழப்பம் இருந்தது.

இந்த நிலையில், ஆளுநரை பாஜக தலைவர்களும், காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்களும் இன்று சந்தித்து பேசினர். இன்று இரவுக்குள் ஆளுநர் தனது முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ சுரேஷ்குமார், முதல்வராக பதவியேற்கும்படி எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார் என்று டுவிட்டர் செய்தியை வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து கர்நாடக பாஜகவும் இதை உறுதி செய்யும் டுவிட்டர் செய்தியை வெளியிட்டது.
மேலும் வரும் 27ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் அவகாசம் அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், இது தொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்களை சுரேஷ்குமார், கர்நாடக பாஜகவும் நீக்கியுள்ளன.
அதனால், ஆளுநர் அழைப்பு விடுத்தாரா இல்லையா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications