முடிச்சு விட்டீங்க போங்க.. கங்கான பார்த்துவிட்ட வேலை! புலம்பி தள்ளும் ஹரியானா பாஜக
சண்டிகர்: ஹரியானாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேளாண் சட்டங்கள் குறித்த கங்கனா ரானாவத்தின் சர்ச்சை கருத்தால் பாஜக பெரும் சவாலை சந்தித்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி 2.O அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்கள் எந்த அளவுக்கு எதிர்ப்பை சந்தித்தன என்பது எல்லோருக்கும் தெரியும். மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, இடைவிடாது நடந்த போராட்டத்தில் சுமார் 750க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். விவசாயிகளின் போராட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வந்தன. அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியான ரிஹானா, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

ரிஹானாவின் ஆதரவு விவசாயிகள் போராட்டத்தை சர்வதேச அளவில் விவாத பொருளாக உயர்த்தியது. பிரச்னை கையை மீறியதை உணர்ந்த மத்திய அரசு, இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாட்டினர் எதற்கு தலையிட வேண்டும்? என்று ரிஹானா மீது சரமாரியாக கேள்விகளை அடுக்கியது.
தீவிரமான போராட்டம், சர்வதேச அளவில் ஆதரவு என இவற்றை பார்த்த மத்திய அரசு, வேறு வழியின்றி மூன்று வேளாண் சட்டங்களையும் கைவிடுவதாக அறிவித்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் விவசாயிகளின் உறுதியான போராட்டம்தான். அதிலும் ஹரியான விவசாயிகள் கொஞம்சம் கூட போராட்டத்திலிருந்த பின்வாங்கவில்லை.
இந்த அளவுக்கு உறுதி மிக்க விவசாயிகளை கொண்ட ஹரியான மாநிலத்தில், இன்னும் ஒரு சில நாட்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது.
கடந்த இரண்டு முறையும் இங்கு பாஜகவே ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. போதாத குறைக்கு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காங்கிரஸில் இணைந்து வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இத்தனை சாவல்களை சந்தித்து, எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று, பல வியூகங்களை வகுத்து களத்தில் இறங்கி கட்சி தீவிரமாக வேலை பார்த்து வருகிறது. ஆனால், இதையெல்லாம் ஒரே நொடியில் நொறுக்கிவிட்டது பாஜக எம்பி கங்கனா ரனாவத்தின் பேச்சு.
"நாட்டின் வளர்ச்சியில், விவசாயிகள்தான் நமது பலம். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். எனவே ஒரு சில மாநிலங்கள் மட்டுமே எதிர்த்த மூன்று வேளாண் சட்டங்களை, மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று நான் கைகளைக் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். சர்ச்சைக்குரிய கருத்தாக இருந்தாலும் பரவாயில்லை" என்று கூறியிருந்தார். இது பல்வேறு தரப்பினரிடைய கடும் அதிருப்தியை உருவாக்கியிருந்தது. குறிப்பாக ஹரியானா மாநில விவசாயிகள் கங்கனாவின் கருத்தை கடுமையாக சாடியிருந்தனர்.
விஷயத்தின் தீவிரத்தையும், அதனால் ஏற்படப்போகும் பாதிப்பையும் உணர்ந்த பாஜக தலைமை, உடனடியாக டேமேஜ் கன்ட்ரோல் வேலையை தொடங்கியது. பாஜகவின் செய்தி தொடர்பாளரை வைத்து, "கங்கனா ரனாவத் கூறிய கருத்துகள் அவரின் தனிப்பட்ட அறிக்கை. விவசாய சட்டங்கள் குறித்த பாஜகவின் நிலைப்பாட்டை அது பிரதிபலிக்கவில்லை" என்று சொல்ல வைத்தது. பாஜக எம்பி சொன்ன கருத்து, கட்சியினுடையது அல்ல என்று பாஜக விலகிக்கொண்டது காங்கிரஸுக்கு மேலும் சாதகமாகிவிட்டது.
இப்போது ஹரியானாவில் கங்கனா ரனாவத்தின் பேச்சுதான் ஹாட் டாப்பிக். மொத்த யுக்தியையும் கங்கனா ரனாவத் சிதைத்துவிட்டாக, ஹரியான பாஜகவினர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது ரனாவத் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது தெரிந்துவிடும்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications