குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு சங்குதான்.. சொல்வது சொந்த கட்சி எம்.பி காகடே!
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடையும் என அக்கட்சி எம்.பி. சஞ்சய் காகடே கூறியுள்ளார்.
புனே: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியைத் தான் தழுவும் அக்கட்சி எம்.பி. சஞ்சய் காகடே தெரிவித்த கருத்து பரபரப்பை கிளப்பியுள்ளது.
குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. வாக்குப் பதிவு முடிவடைந்த உடனேயே வெளியான கருத்து கணிப்புகள் அனைத்தும் பாஜக ஆட்சி அமைக்கும் என கூறின.

இந்நிலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக எம்.பி.யான சஞ்சய் காடே, குஜராத்தில் தமது கட்சி படுதோல்வியைத்தான் தழுவும் என அதிரடியாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சஞ்சய் காகடே கூறியதாவது:
தற்போதைய தேர்தலில் குஜராத்தில் பாஜக வெல்லாது. காங்கிரஸ் கட்சிக்கே பெரும்பான்மை கிடைக்கும்.
இது என்னுடைய சொந்த கருத்து கணிப்பு. நான் அனுப்பிய 6 பேர் கொண்ட குழுவின் கருத்து கணிப்பு.
குஜராத்தில் வளர்ச்சி குறித்து பாஜக பிரசாரம் செய்யாமல் வாக்காளர்கள் உணர்வுகளைத் தான் தூண்டிவிட்டனர். ஆட்சியிலேயே இல்லாத காங்கிரஸைத்தான் அவர்கள் விமர்சித்தனர்.
இவ்வளவுக்கும் பிறகு பாஜக வென்றுவிட்டால் நிச்சயமாக பிரதமர் மோடி மட்டுமே அதற்கு காரணம்.
இவ்வாறு சஞ்சய் காகடே கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications