For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்தில் சரித்திரம் படைத்த பாஜக- 99 இடங்களில் வென்று 6-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது!

By Mathi
Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத்தில் தனிப்பெரும்பான்மையுடன் 6-வது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்ந்து சரித்திரம் படைத்திருக்கிறது பாஜக. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 99 இடங்களை பாஜக கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது.

குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரையில் அது காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகத்தான் இருந்து வந்தது. 1962-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை காங்கிரஸுக்கு நெருக்கடி தரும் சக்தியாக அங்கே இருந்தது காங்கிரஸின் மற்றொரு பிரிவான ஸ்தாபன காங்கிரஸ்தான்.

1980களில் பாஜக உதயமானதைத் தொடர்ந்து காங்கிரஸின் கோட்டையில் ஓட்டை விழத் தொடங்கியது. 1980 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்தாலும் ஜனதா கட்சி 21 இடங்களிலும் பாஜக 9 இடங்களிலும் வெற்றி பெற்றது.

1985-க்கு பின் தலைகீழ் நிலைமை

1985-க்கு பின் தலைகீழ் நிலைமை

1985-ம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸுக்கு சவாலாக ஜனதா கட்சியும் பாஜகவும் இருந்தன. ஆனால் 1985-க்குப் பின் நிலைமை தலைகீழானது.

காங்கிரஸ் தோல்வி

காங்கிரஸ் தோல்வி

1990-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வரலாறு காணாத படுதோல்வியை குஜராத்தில் சந்தித்தது. ஜனதா தளம் 70; பாஜக 67 இடங்களில் வென்றது; காங்கிரஸ் கட்சியோ வெறும் 33 இடங்களில்தான் வெல்ல முடிந்தது.

மோடி தலைமையில்...

மோடி தலைமையில்...

அன்றிருந்து குஜராத்தில் பாஜகவின் சகாப்தம்தான். 1995, 1998, 2002, 2007, 2012 ஆகிய அத்தனை சட்டசபை தேர்தல்களில் பாஜக 110 இடங்களுக்கு அதிகமான தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் குஜராத் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. 2002 முதல் 2012 வரை முதல்வராக இருந்த மோடி தலைமையில் தேர்தல்களை பாஜக எதிர்கொண்டது.

பாஜக கோட்டையில் ஓட்டை

பாஜக கோட்டையில் ஓட்டை

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியால் அதிகபட்சமாக 60 இடங்களைக் கூட தாண்ட முடியாத நிலைதான் இருந்தது. தற்போதைய தேர்தலில் பாஜகவின் கோட்டையிலும் ஓட்டை விழுந்திருக்கிறது.

6-வது முறையாக ஆட்சி

6-வது முறையாக ஆட்சி

இந்த தேர்தலில் பாஜக 99 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 80 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கடந்த தேர்தல்களை ஒப்பிடுகையில் பாஜக இடங்கள் குறைவு என்றாலும் ஆட்சி அமைக்க தேவையான 92 தொகுதிகளுக்கும் கூடுதலாகவே வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் குஜராத்தில் 6-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி சரித்திரம் படைத்துவிட்டது பாஜக.

English summary
BJP party to form government for the sixth straight time in Gujarat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X