வாயை மூடி பேசவும்.. சாமியார் பிரக்யாவுக்கு பாஜக தொடர்ந்து தடை!
பாஜக சாமியார் பேச கட்சி தலைமை தடை விதித்துள்ளது.
போபால்: தேவையில்லாமல் சர்ச்சைக் கருத்துக்களை மட்டுமே பேசி வருவதால் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூருக்கு மே 19ம் தேதி வரை அதாவது கடைசிக் கட்ட வாக்குப் பதிவு முடியும் வரை பேசுவதற்கு பாஜகதடை விதித்துள்ளது.
போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் சர்ச்சைக்குரிய பெண் சாமியார் பிரக்யா. மாலேகான் குண்டுவெடிப்பில் சிக்கி கைதாகி சிறைக்குப் போய் திரும்பியவர் பிரக்யா. வெளியே வந்ததும் அவரை போபால் வேட்பாளராக்கியது பாஜக.

ஆனால் வெளியில் வந்தது முதல் தொடர்ந்து சர்ச்சையாகவே பேசி வந்தார் பிரக்யா. இதனால் பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்தது. இதையடுத்து கடைசிக் கட்ட தேர்தல் முடியும் வரை பேசவே கூடாது என கட்சி மேலிடம் அவருக்குத் தடை விதித்து விட்டது.
இவர் ஏதாவது பேசப் போக, மத்தியப் பிரதேசத்தில் பெரும் பாதிப்பு வந்து விடுமோ என பாஜக பயப்படுகிறதாம். காரணம், பிரக்யாவின் பேச்சு அப்படி மோசமாக உள்ளதால்.
இதன் காரணமாக பொது இடங்களில் தற்போது பேசுவதைத் தவிர்த்து வருகிறார் பிரக்யா. மும்பை தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே குறித்து பிரக்யா தெரிவித்த மோசமான கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். நான் விட்ட சாபத்தால்தான் கர்கரே உயிரிழந்தார் என்று பிரக்யா கூறியிருந்தார்.
போபால் தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிடுகிறார் பிரக்யா என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications