2012ஐ விட குஜராத் தேர்தலில் பாஜகவிற்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு... டைம்ஸ் நவ் சர்வே
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு கடந்த தேர்தல்களைவிட பிரகாசமானதாவே இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
டெல்லி : 2017 குஜராத் சட்டசபைக்கான தேர்தலில் கடந்த சட்டசபை தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலைவிட அதிக அளவில் வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக டைம்ஸ் நவ் தேர்தல் கருத்துக்கணிப்பு கூறுகிறது.
குஜராத் சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி விஎம்ஆருடன் இணைந்து தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதன் முடிவுகளை அந்தத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இதில் 2012 சட்டசபை தேர்தலில் பாஜக 115 தொகுதிகளை பிடித்த நிலையில் 2014 மக்களவைத் தேர்தலில் 165 தொகுதிகளைப் பிடித்தது. 2017 சட்டசபை தேர்தலில் பாஜக 118 முதல் 134 வரையிலான தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவில் தெரிய வந்துள்ளது.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் 2012 சட்டசபை தேர்தலில் 61 தொகுதிகளையும், 2014 மக்களவைத் தேர்தலில் 17 தொகுதிகளிலும் வென்றுள்ளது. தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 49 முதல் 61 தொகுதிகள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது.
2012 தேர்தலை ஒப்பிடும் போது பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு இந்தத் தேர்தலில் அதிக அளவில் உள்ளதாகவே கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. மேலும் காங்கிரஸ் அதிக இடங்களை பிடிக்காவிட்டாலும் 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே நிலையை எட்ட முடியும் என்ற அளவிலேயே கருத்துக்கணிப்பு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications