குஜராத்தில் பெரும்பான்மை தொகுதிகளை பாஜக கைப்பற்றும்: சி.என்.என். கருத்து கணிப்பு
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மை தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சியே கைப்பற்றும் என்று சி.என்.என். ஐபிஎன் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாநிலத்தில் மொத்தம் 26 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் 20 முதல் 26 தொகுதிகளையுமே பாரதிய ஜனதா கைப்பற்றக் கூடும் என்கிறது இக்கருத்து கணிப்பு.
அதாவது குஜராத்தில் மொத்தம் 55% வாக்குகளை பாஜக பெறக்கூடுமாம். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 0 முதல் 4 இடங்கள் வரை கிடைக்குமாம். காங்கிரஸ் கட்சிக்கு 31% வாக்குகள் கிடைக்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு.
ஆம் ஆத்மி கட்சிக்கு எந்த ஒரு தொகுதியும் கிடைக்காது என்ற போதும் 6% வாக்குகள் கிடைக்குமாம்.












Click it and Unblock the Notifications