29 முறை டெல்லி சென்றும் ஆந்திராவுக்கு நீதி கிடைக்கவில்லை.. சந்திரபாபு நாயுடு ஆவேசம்!
29 முறை டெல்லி சென்று வந்தும் ஆந்திராவுக்கு நீதி கிடைக்கவில்லை என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
Recommended Video

குண்டூர்: 29 முறை டெல்லி சென்று வந்தும் ஆந்திராவுக்கு நீதி கிடைக்கவில்லை என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின், நடந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தேர்தலைச் சந்தித்தது.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதி உதவியும் அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட 19 வாக்குறுதிகளை மத்திய அரசு அளித்தது. ஆனால், இதுவரை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிகிறது.

பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை
அண்மையில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிலும் கூட ஆந்திராவுக்கு திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அநீதி இழைத்துவிட்டதாக
இதனால் பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணி உடையலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு ஆந்திராவுக்கு அநீதி இழைத்துவிட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

29 முறை சென்றும் பலனில்லை
மேலும் டெல்லிக்கு 29 முறை சென்றும் பலரை சந்தித்தும் எந்த பலனும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதுவரை ஆந்திராவுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் பட்ஜெட்டிலும் ஆந்திராவுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

5 கோடி மக்களின் சார்பாக
ஆந்திர மாநிலத்துக்கு நன்மை கிடைக்கும் என்று எண்ணியே தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்ததாகவும் அவர் கூறினார். ஆந்திராவில் உள்ள 5 கோடி மக்களின் சார்பாக நீதி வேண்டி கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறினார்.

விவாதிக்க தயார்
ஆந்திராவுக்கு மத்திய அரசு செய்துள்ள திட்டங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் மற்ற மாநிலங்கள் எவ்வளவு பெற்றுள்ளன, நாங்கள் எவ்வளவு பெற்றுள்ளோம் என்பது குறித்து விவாதிக்க தான் தயார் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
-
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
புதுச்சேரியில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி.. பாஜக + அதிமுக + லஜகவுக்கு 14 சீட்! -
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல்












Click it and Unblock the Notifications