ஜம்மு காஷ்மீர் தேர்தல்! பள்ளத்தாக்கு பகுதியில் வெறும் 19 வேட்பாளர்களுடன் நிறுத்திக்கொண்ட பாஜக

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. எனவே தேர்தல் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. குறிப்பாக பள்ளத்தாக்கு பகுதியில் பாஜக வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.

சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் பாஜகவை கடும் அப்செட் ஆக்கியிருக்கிறது. காரணம், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததுதான். தொகுதி குறைவாக கிடைத்தால் கூட ஓகேதான், ஆனால் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு தொகுதி கண்டிப்பாக வேண்டும் என்று கட்சி எதிர்பார்த்திருந்தது. ஆனால், இந்த எதிர்பார்ப்பில், ஒரு லோடு மண் அள்ளி போட்டது தேர்தல் ரிசல்ட். இப்படி இருக்கையில் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று தீவிரமாக பணியாற்றி வருகிறது.

jammu and kashmir jammu and kashmir assembly election 2024 bjp

கடந்த 2019ல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, நாடு முழுவதும் போராட்டத்தை தூண்டியது. அதேநேரம் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் அம்மாநில சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் முடிந்துவிட்டதால், உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

எதிர்க்கட்சிகள் என்ன வலியுறுத்தினாலும், அசைந்து கொடுக்காமல் இருந்த மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் தேர்தல் தொடர்பாக அதிரடியாக உத்தரவு போட்டது. அதாவது 2024 செப்டம்பர் மாதத்திற்கு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. எனவே வேறு வழியின்றி மத்திய அரசு தேர்தலை நோக்கி நகர்ந்திருக்கிறது.

90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதாவது முதல் கட்ட தேர்தல் செப்.18ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் செப்.25ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக்டோபர் மாதம் 1ம் தேதி நடக்கிறது. மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன. எனவே தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.

ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தானின் உரிமை கோரல், தீவிரவாதிகளின் ஊடுருவல், சட்டப்பிரிவு 370 நீக்கம், மாநில அந்தஸ்து கொடுக்காது.. போன்ற காரணங்களால் இந்த தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவிலும் இந்த தேர்தல் கவனம் பெற்று வருகிறது. இப்படி இருக்கையில், பாஜக பள்ளத்தாக்கு பகுதியில் வெறும் 19 வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளது.

பள்ளத்தாக்கு பகுதியில் மொத்தம் 47 தொகுதிகள் இருக்கின்றன. இதில், 28 இடங்களை பாஜக தவிர்த்திருக்கிறது. இதன் மூலம், 19 தொகுதிகளில் மட்டுமே கட்சி போட்டியிடுவதை உறுதி செய்திருக்கிறது.

தலைமையின் இந்த முடிவு கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், சில நிர்வாகிகள் இந்த முடிவை ஆதரிக்கின்றன. காரணம், பள்ளத்தாக்கு பகுதியில் கட்சிக்கு இருக்கும் குறைந்த செல்வாக்குதான். எனவே வீம்புக்கு வேட்பாளர்களை களம் இறக்கி, தோல்வியடைவதைவிட உள்ளூர் அளவில் பிரபலமானவர்களை சுயேட்சையாக களமிறக்கி, அவர்களுக்கு பின்னால் இருந்து பாஜக ஆதரவளிப்பது என்று கட்சி தலைமை யோசித்திருக்கிறது. இதனால்தான் வெறும் 19 வேட்பாளர்களுடன், பள்ளத்தாக்கு பகுதியில் பாஜக நின்றுவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+