குஜராத் சட்டசபை தேர்தல்: முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக
குஜராத்தில் டிசம்பரில் நடக்க இருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அகமதாபாத்: குஜராத்தில் டிசம்பரில் நடக்க இருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. 70 பேர் கொண்ட முதல் கட்ட பாஜக வேட்பாளர் பட்டியில் வெளியாகி உள்ளது.
குஜராத் சட்டசபையின் 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 9-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு டிசம்பர் 14-ல் நடைபெறுகிறது. இரண்டு கட்ட வாக்குகளும் முடிந்த பின் டிசம்பர் 18-ந் தேதி முடிவுகள் வெளியிடப்படும். இங்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் நவம்பர் 21 ஆகும். இந்த நிலையில் பாஜக தனது முதல்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
70 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்று இருக்கின்றனர். குஜராத் முதல்வர் 'விஜய் ரூபானி' ராஜ்கோட் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். குஜராத்தின் துணை முதல்வர் நிதின் பட்டேல் 'மேஹ்சேனா' தொகுதியில் போட்டியிடுகிறார்.
குஜராத் மாநில பாஜக கட்சி தலைவர் ஜீத்து வாகினி தற்போது எம்.எல்.ஏ வாக இருக்கும் அதே 'பாவ் நகர்' தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் சேர்ந்துள்ள தலைவர்கள் பலருக்கு முக்கியமான தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
போன தேர்தலில் போட்டியிட்ட பலர் இந்த தேர்தலிலும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிடும் என்று கூறியிருக்கிறது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications