For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அலை இல்லாமலே வெற்றி பெறமுடியும்... மோடி தான் குஜராத்தின் மேன் ஆஃப் த மொமென்ட்!

குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதன் முழு பெருமையும் பிரதமர் நரேந்திர மோடியைதான் சாரும். மோடிதான் குஜராத்தில் பாஜக வெற்றியின் மேன் ஆஃப் த மொமென்ட் ஆவார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இன்றைய குஜராத் தேர்தலின் வெற்றிக்கு முக்கிய காரணம் மோடி தான்- வீடியோ

    காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதன் முழு பெருமையும் பிரதமர் நரேந்திர மோடியைதான் சாரும். மோடிதான் குஜராத்தில் பாஜக வெற்றியின் மேன் ஆஃப் த மொமென்ட் ஆவார்.

    குஜராத்தில் ஆறாவது முறையாக பாஜக தொடர்ந்து ஆட்சியமைக்கவுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதன் முழு பெருமையும் பிரதமர் நரேந்திர மோடியைதான் சாரும்.

    குஜராத் தனது கோட்டை என பாஜக மீண்டும் நிரூபித்துள்ளது. இம்முறையும் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது.

    பாஜகா வெற்றி

    பாஜகா வெற்றி

    பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை பெரும் எதிர்ப்பை இந்த தேர்தல்களில் வெளிப்படுத்தும் என கூறப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக குஜராத் மற்றும் ஹிமாச்சலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

    வெற்றிக்கு மோடிதான் காரணம்

    வெற்றிக்கு மோடிதான் காரணம்

    இந்த வெற்றிக்கு முழு காரணமும் பிரதமர் மோடிதான். குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றதற்கு முதல்வர் விஜய் ரூபானியே அல்லது குஜராத் மாநில பாஜக தலைவர் ஜித்து வகானியோ காரணம் இல்லை.

    மன்னிப்பு கேட்ட மோடி

    மன்னிப்பு கேட்ட மோடி

    பிரதமர் மோடி ஒரு நாட்டின் பிரதமரை போல் அல்லாமல் பாஜகவின் மூத்த தலைவர் என்பதை போல் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பம்பரமாய் சுழன்று பிரச்சாரம் செய்தார். கடந்த ஆண்டு நகர் மற்றும் கிராமப்புறங்களில் பாஜக செய்த பிழைகளை மன்னித்து பாஜகவுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை கேட்டுக்கொண்டார் மோடி.

    டார்கெட் குறைந்துவிட்டது

    டார்கெட் குறைந்துவிட்டது

    இதனை ஏற்றுக்கொண்ட குஜராத் மக்கள் எச்சரித்த பிரதமர் மோடிக்கு இந்த வெற்றியை கொடுத்துள்ளனர். அதுவே 150 இடங்களை கைப்பற்ற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது குறைந்ததற்கு காரணம்.

    பயம் காட்டிய காங்கிரஸ்

    பயம் காட்டிய காங்கிரஸ்

    பாஜக தலைவர் அமித்ஷா 150 இடங்களை வெல்வோம் என பெருமையடித்துக் கொண்டிருந்தார். ஆனால் ராகுல் காந்தியுடனான கூட்டணியில் ஹர்திக் பட்டேல், அல்பேஷ் தகோரே, ஜிக்னேஷ் மெவானி ஆகியோர் இது உற்சாகமான புதிய காங்கிரஸ் என பயம் காட்டியுள்ளனர்.

    மோடிக்கு சொந்தமான நாள்

    மோடிக்கு சொந்தமான நாள்

    இருப்பினும் பாஜகவுக்கான இந்த நாள் பிரதமர் மோடிக்கு சொந்தமானது. மோடியின் இந்த வெற்றியை எந்த தலைவரும் நெருங்க முடியாது என்றும் அவருக்கு சமமான தலைவர் பாஜகவில் கூட இல்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகிறது.

    English summary
    For the sixth consecutive time, the BJP has won Gujarat and the man of the moment is again Prime Minister Narendra Modi. Modi did canwas in Gujarat like BJP top leader He was not shown that he is a prime minister of the counter. Modi asked Voters to forgive him for BJP's last year errors. That only reflected in the Assembly elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X