மோடி, அமித்ஷா பிரசார வியூகம்.. அசாமில் மீண்டும் அசுர பலத்துடன் சாதித்து காட்டிய பாஜக!

Subscribe to Oneindia Tamil

கவுகாத்தி: அசாமில் பாஜக அசுர வெற்றியை நோக்கி நடைபோட்டு கொண்டிருக்கிறது. தற்போது வரை பாஜக 77 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

அஸ்ஸாம் மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கியது.

நம்பிக்கையுடன் இறங்கிய காங்கிரஸ்

நம்பிக்கையுடன் இறங்கிய காங்கிரஸ்

ஆனால் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜகவின் நீண்ட நாள் கூட்டாளியான போடோலேண்ட் மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொண்டது காங்கிரஸ்.மேலும் இடதுசாரி கட்சிகளும் காங்கிரஸ் கூட்டணிக்காக களம் கண்டனர்.

மீண்டும் பாஜக வெற்றி

மீண்டும் பாஜக வெற்றி

123 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தற்போது வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது வரை அசாமில் பாஜக 76 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 47 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

பிரச்சினையை மாற்றியது

பிரச்சினையை மாற்றியது

பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி பாஜக சென்று கொண்டிருப்பதால் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. அசாமில் மத்திய அரசின் சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. ஏராளமான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் இந்த தேர்தலில் இது எதிரொலிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் இதை எல்லாம் மீறி பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் அறிக்கையால் வெற்றி

தேர்தல் அறிக்கையால் வெற்றி

அசாமில் 30 லட்சம் குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 நிதியுதவி வழங்கப்படும். இளைஞர்களுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக் கப்படும். அசாமி மொழி அடையா ளத்தை பாதுகாக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை பாஜக மக்களுக்கு அளித்தது. அதன் அடிப்படையில் தற்போது வெற்றி பெற்றது. கடந்த 20216 சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 74 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் அசாமில் அடிக்கடி பிரசாரம் மேற்கொண்டனர். இதுவும் பாஜகவுக்கு நல்ல பலன்களை கொடுத்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+