தேர்தல் முடிந்ததும்.. பிஜு ஜனதா தளத்தை உடைப்பதே பாஜகவின் திட்டம்.. விகே பாண்டியன் பரபர குற்றச்சாட்டு
புவனேஷ்வர்: ஒடிசாவில் ஆளும் கட்சியாக உள்ள ஜனதா தளம் கட்சியை பாஜக உடைக்க முயல்வதாக அக்கட்சியின் வி.கே. பாண்டியன் பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இன்று லோக்சபா தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் முதலாம் கட்ட சட்டசபைத் தேர்தலும் நடக்கிறது. அங்கு ஆளும் பிஜூ ஜனதா தளம் மற்றும் பாஜக இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

குற்றச்சாட்டு: இதற்கிடையே ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியை பாஜக உடைக்க முயல்வதாக அக்கட்சியின் வி.கே. பாண்டியன் பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் நெருக்கமாக இருக்கும் வி.கே. பாண்டியன் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக அவர் சமீபத்தில் பேசுகையில், "ஒடிசாவில் இந்த சட்டசபைத் தேர்தலில் 50 இடங்களில் வென்றுவிட்டு, அதன் பிறகு பிஜு ஜனதா தளத்தை உடைத்து ஆட்சியைப் பிடித்துவிட பாஜக முயல்கிறது. பிஜு ஜனதா தளத்தை உடைக்க வேண்டும் என்பது தான் அவர்கள் யுக்தியாக இருக்கிறது. இதை என்னால் வெளிப்படையாகவே சொல்ல முடியும்.
30 நிமிடங்கள் அந்தரத்தில் தவித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.. வானில் வட்டமடித்த ஹெலிகாப்டர்!
பாஜக பிளான்: ஒடிசாவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது பாஜகவின் நோக்கம் இல்லை. இங்கு சீட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே பாஜகவின் இலக்கு.
இதுபோல கட்சியை உடைப்பதை அவர்கள் வழக்கமாகவே செய்து வருகிறார்கள்.. மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் எனப் பல மாநிலங்களிலும் இதுபோலத் தான் இந்த மாநிலங்களும் பல கட்சிகளை உடைத்துள்ளனர். ஆனால், ஒடிசா மக்கள் பாஜக மீது ஒருபோதும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள், அவர்கள் நவீன் பட்நாயக்கை தான் நம்புகிறார்கள்" என்றார்.
மீண்டும் நவீன் பட்நாயக்: ஒடிசாவில் பல முக்கிய பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருவது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு விகே பாண்டியன், "2014 முதலே அவர்கள் இதுபோலத் தான் கூட்டம் கூட்டமாக வந்து பல்வேறு கூட்டங்களை நடத்தி உள்ளனர். இருப்பினும், அப்போதே அவர்களுக்கு ஒடிசா மக்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். 2024ம் ஆண்டும் இதே நிலைதான் இருக்கும். ஒடிசா மக்கள் மீண்டும் நவீன் பட்நாயக்கையே தேர்வு செய்ய உள்ளனர்" என்றார்.
இந்த தேர்தலில் நிச்சயம் பிஜூ ஜனதா தளம் தனிப்பெரும்பான்மையுடன் வெல்லும். இது எனக்கு உறுதியாகத் தெரியும் என்பதாலேயே நவீன் பட்நாயக் ஜூன் 9 காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணிக்குள் முதல்வராகப் பதவியேற்பார் எனக் கூறினேன்" என்று அவர் தெரிவித்தார்.
ஒடிசா: 147 இடங்கள் கொண்ட ஒடிசா மாநிலத்தில் கடந்த 2019இல் நடந்த ஒடிசா சட்டசபைத் தேர்தலில் பிஜூ ஜனதா தளம் 112 இடங்களில் வென்றது.. பாஜக மற்றும் காங்கிரஸால் முறையே 23 மற்றும் 9 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இந்த முறை தொடர்ந்து 7ஆவது முறையாக ஆட்சி பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் நவீன் பட்நாயக் களமிறங்குகிறார்.
ஆனால், ஆளும் பிஜேடி தரப்பில் மக்கள் அதிருப்தி அதிகரித்துள்ளதால் இந்த முறை ஆட்சி மாற்றம் இருக்கும் என பாஜக தரப்பில் கூறப்படுகிறது. இதனால் அங்கு பிஜேடி மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications