2019 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 276 இடங்கள்.. தென் மாநிலங்கள் சவாலாக இருக்கும்- ஏபிபி சர்வே

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வட கிழக்கைக் கைப்பற்றுகிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி- வீடியோ

    டெல்லி: 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி எளிதாக 276 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக ஏபிபி தொலைக்காட்சி சேனல், சி-ஓட்டர் அமைப்பு இணைந்து, நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் தென் இந்தியாவில் மட்டும் அதற்கு சவால் காத்துள்ளது.

    பெட்ரோல், டீசல் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம், கடுமையான வரி விதிப்புகள், வேலைவாய்ப்பில் அதிகரிப்பு இன்மை, பொருளாதார மந்தநிலை, பணமதிப்பிழப்பு போன்ற மக்களைத் துன்புறுத்திய நடவடிக்கைகள் என அடுக்கடுக்காக பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியின் மீது குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் ஏபிபி வெளியிட்டுள்ள இந்த கருத்துகணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

    கடந்த லோக்சபா தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. அதிலும்கூட பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று சாதித்தது.

    கருத்து கணிப்பு

    கருத்து கணிப்பு

    இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் குறித்த, தேசத்தின் மனநிலை என்ற ஒரு கருத்து கணிப்பை ஏபிபி சேனல் மற்றும் சி-ஓட்டர் அமைப்பு இணைந்து நடத்தியது. இந்தக் கருத்துக் கணிப்பில் பெரும்பாலான மாநிலங்களில், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும், எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணியை பொறுத்து பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்பு தீர்மானிக்கப்படும் என்பது இந்த கருத்துக் கணிப்பில் ஆணித்தரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரிய மாநிலங்கள்

    பெரிய மாநிலங்கள்

    மற்றபடி பெரிய மாநிலங்களான மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்றவற்றில் பாஜக கூட்டணி எளிதாக வெற்றி பெறும் என்று தான் இந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா உடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டால் காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படும் என்பதும் இந்த கருத்துக் கணிப்பின் சாராம்சம்.

    ஆச்சரிய முடிவுகள்

    ஆச்சரிய முடிவுகள்

    இந்த கருத்துக் கணிப்பில் இரு ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்று, வடகிழக்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமோக வெற்றி பெறும் என்பது. அஸ்ஸாம், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிஸோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக கூட்டணிக்கு 18 இடங்கள் கிடைக்குமாம். இதேபோல, ஒரிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சியை (6 தொகுதிகள்) பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜக (13 தொகுதிகளில்) அமோக வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிராந்தியங்களில் பாரதிய ஜனதா கட்சி, இதற்கு முன்பாக இவ்வளவு வலிமையுடன் இருந்ததில்லை. சமீபகாலமாகத்தான் வடகிழக்கு மாநிலங்களிலும், ஒடிசாவிலும் பாஜக முன்னேறி வருகிறது.

    ராகுல் காந்தி சிந்திப்பாரா

    ராகுல் காந்தி சிந்திப்பாரா

    பொதுவாக தலைநகர் டெல்லியில் எந்த மாதிரியான மனநிலையில் மக்கள் வாக்களிக்கிறார்களோ, அதுதான் ஒட்டு மொத்த இந்தியாவிற்குமான பெரும்பான்மையாக எதிரொலிக்கும் என்பார்கள். ஏபிபி சேனல் கருத்துக் கணிப்புபடி, டெல்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் வெல்லப் போகிறது என்று தெரிகிறது இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள். மொத்தத்தில், பாஜக கூட்டணி 276 தொகுதிகளை வென்று பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியை பிடிக்குமாம். காங்கிரஸ் கூட்டணி 122 தொகுதிகளிலும் பிற கட்சிகள் 155 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
    இந்த சர்வே முடிவுகள், பாஜக கூட்டணிக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளன. ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்ற எச்சரிக்கை மணியை இந்த கருத்துக்கணிப்பு ஓங்கி ஒலிக்கிறது.

    வெற்றியை தடுக்கும்

    வெற்றியை தடுக்கும்

    அதே நேரம், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் உள்ளிட்டவை 76 இடங்களை அள்ளும் என்கிறது, ஏபிபி சர்வே. காங்கிரஸ் கூட்டணிக்கு 32 இடங்கள் கிடைக்கும். பாஜக கூட்டணிக்கு 3வது இடமே கிடைக்குமாம். பாஜக கூட்டணிக்கு மொத்தம் உள்ள 129 தொகுதிகளில் வெறும் 21 இடமே கிடைக்கும் என்கிறது இந்த கருத்து கணிப்பு. பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர பெரும் சவாலாக தென் இந்தியா இருக்கப்போகிறது என்பது உறுதி.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+