போலீஸ் ஸ்டேஷனில் பிறந்தநாள் கொண்டாடிய பாஜக தலைவர்.. “காவல் நிலையமா? கட்சி ஆபீஸா?” காங்கிரஸ் கொதிப்பு

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில், காவல் நிலையத்தில் பாஜக தலைவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டதாக வீடியோ வெளியிட்டு கடுமையாக விமர்சித்தது காங்கிரஸ் கட்சி. ஆனால், இதனை அகமதாபாத் போலீசார் மறுத்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 26 ஆண்டு காலமாகவே அங்கு தொடர்ந்து பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள காவல் நிலையத்தில், பாஜக தலைவர் ஒருவரின் பிறந்தநாளை போலீசார் சேர்ந்து கொண்டாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

BJP Gujarat Police station

பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர் ஹிமான்ஷு சௌகான் தனது பிறந்தநாளை குஜராத்தின், அகமதாபாத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். அப்போது போலீஸ் அதிகாரிகளும் உடன் இருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்து குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

அந்த வீடியோவில் டிசிபி கனன் தேசாய் உள்ளிட்ட போலீசார் அதிகாரிகள் உள்ளனர். பாஜகவை சேர்ந்த ஹிமான்ஷு சௌகான் கேக் வெட்ட, போலீசார் உள்ளிட்ட அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து பாடலை பாடி, கேக் ஊட்டிவிட்டு கொண்டாடி உள்ளனர். பிறந்தநாள் வாழ்த்து பாடலின் இறுதியில் அவர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்றும் கூறுகின்றனர்.

இந்த வீடியோவை பகிர்ந்த குஜராத் காங்கிரஸ் கட்சி, "காவல்துறையினர் பாஜக தலைமையிடம் இருந்து சம்பளம் பெறுவதுபோல் காவல் நிலையத்தையே பாஜக அலுவலகம் போல் மாற்றிவிட்டனர். பாஜக தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் காவல் நிலையங்கள் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவா? அல்லது பாஜகவின் கட்சி கூடங்களாக இருக்கவா? இதற்கு குஜராத் மாநில அரசு பதில் வேண்டும்" என்று தேரிவித்துள்ளது.

காவல் நிலையத்தில் இதுபோன்ற கொண்டாட்டங்கள் நடத்துவது மோசமான முன்னுதாரணம் என்று பலர் விமர்சித்துள்ளனர். ஆனால், இது அரசியல் உள்நோக்கம் இல்லாதது. இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்ற ரத்த தான முகாமின் வெற்றிக்காக எளிமையாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது என அகமதாபாத் போலீசார் கூறி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+