மாயாவதியை இழிவுபடுத்தி பேசிய பாஜக நிர்வாகி தயாசங்கர் சிங் கைது !
பீகார்: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டு பேசிய உ.பி. பாஜக முன்னாள் துணைத் தலைவர் தயாசங்கரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக மாநில துணைத் தலைவராக இருந்த தயாசங்கர் சிங், மாயாவதியை இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே மாயாவதியை இழிவுபடுத்தி பேசியதற்காக பாரதிய ஜனதா கட்சியின் உ.பி. துணைத்தலைவர் பதவி மற்றும் கட்சியிலிருந்தும் ஆறு ஆண்டுகளுக்கு தயாசங்கர் சிங் நீக்கப்பட்டார்.
அதையடுத்து, அவருக்கு எதிராக, லக்னோ நகரில் உள்ள ஹஜ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஜூலை 20-ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், தயாசங்கர் சிங் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், தயாசங்கர் சிங்குக்கு எதிராக பிணையில் வெளிவரமுடியாத பிடியாணையை லக்னோ பெருநகர நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த நிலையில், தலைமறைவாக இருந்த தயாசங்கரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் பீகாரின் புக்ஸர் என்ற இடத்தில் உத்தரப்பிரதேச மற்றும் பீகார் காவல்துறையினர் கைது செய்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications