முஸ்லிம் இளைஞருடன் மகளுக்கு திருமண ஏற்பாடு..இந்துத்வா அமைப்பு எதிர்ப்பால் பின் வாங்கிய பாஜக நிர்வாகி
டேராடூன்: பாஜக நிர்வாகி தனது மகளை முஸ்லிம் இளைஞருக்கு மகளை திருமணம் செய்து வைப்பதற்கு இந்துத்வா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புக்கு பணிந்து மகளின் திருமணத்தை ஒத்திவைப்பதாக உத்தரகாண்ட் பாஜக நிர்வாகி தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பவ்ரி ஹர்வால் மாவட்டத்தின் பவ்ரி நகராட்சியின் தலைவராக யஷ்பால் பேனம் என்பவர் உள்ளார். பாஜக பிரமுகரான இவரது மகள் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்தார். மகளின் விருப்பத்திற்கு தடை ஏதும் விதிக்காத யஷ்வல் பேனம், மாப்பிள்ளை வீட்டில் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்.

இதன்படி வரும் 28 ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்தது. திருமணத்திற்கான முன்னேற்பாடுகள் எல்லாம் தடல் புடலாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. திருமணத்திற்கான அழைப்பிதழ்களையும் அச்சிட்டு உறவினர்கள் நண்பர்கள், கட்சி நண்பர்களுக்கு என கொடுத்து திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்த வேண்டும் என்று அழைத்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக இணையத்தில் இந்த திருமண அழைப்பிதழ் பரவியது. பாஜக பிரமுகரின் மகளுக்கு இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மணமகனுக்கு திருமணம் செய்து கொடுப்பதா? என பல இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். யஷ்பால் பேனத்தின் உருவ பொம்மையையும் எரித்து சில அமைப்புகள் போராட்டம் நடத்தின.
குறிப்பாக விஷ்வ இந்து பரிஷத், பைரவ் சேனா, பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை நடத்தின. இத்தகைய திருமணத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவர் கூறியிருந்தார். அதேபோல், சமூக வலைத்தளங்களிலும் ஒரு தரப்பினர் விமர்சித்து கருத்துக்களை கூறி வந்தனர்.
சிலர் ஆதரவாகவும் கருத்துக்களை கூறி வந்தனர். உத்தரகாண்டில் இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், எதிர்ப்புகளுக்கு பயந்து தனது மகளின் திருமணத்தை தள்ளி வைப்பதாக யஷ்பல் பேனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த யஷ்பல் பேனம், தனது மகளின் மகிழ்ச்சிக்காக முஸ்லீம் இளைஞருக்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதம் தெரிவித்தேன்.
ஆனால், இந்த திருமணத்திற்கு சமூக வலைதளங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. எனவே, திருமணத்தை தள்ளி வைத்துள்ளேன். தற்போது பொதுமக்களின் குரலுக்கும் மதிப்பு கொடுத்து இருக்கிறேன்" என்றார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications