சென்னை சூப்பர் கிங்ஸூக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மனு... களம் இறங்கும் சுப்பிரமணியசாமி..
டெல்லி : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதித்துள்ள இரண்டாண்டு தடையை மறுபரிசீலனை செய்யுமாறு மனு தாக்கல் செய்யப்போவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். முறைகேடு வழக்கில் லோதா குழுவின் அறிக்கையில் கூறியபடி, ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை அணிக்கான தடையை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
ஐ.பி.எல். முறைகேடு வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கையில், சில தனிநபர்களுக்கு பி.சி.சி.ஐ. நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வாழ்நாள்தடை விதித்து இருப்பது மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படுகிறது.
ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதித்திருப்பது மிகவும் கடுமையான தண்டனையாகவும் தோன்றுகிறது.
கிரிக்கெட் போட்டிகளில் மும்பை மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் இயங்கி வந்த துபாய் கும்பல் எந்த வகையிலும் தலையிடாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுத்த பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் மீது தமிழர்கள் அனைவரும் நல்ல மதிப்பு வைத்துள்ளனர்.
எனவே தமிழர்களின் சார்பிலும் பொதுநலம் சார்ந்தும் நீதிபதி லோதா குழுவின் முன்பு சென்னை அணிக்கு விதித்துள்ள தடையை மறுபரிசீலனை செய்யுமாறு மனு தாக்கல் செய்வேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் சுப்ரமணியசாமி கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications