ஸ்ரீரங்கத்தில் பாஜக வேட்பாளர் யார்? டெல்லி முதல்வர் வேட்பாளர் கிரண் பேடியா? இன்று அறிவிக்கிறது பாஜக!
டெல்லி: பாஜக தேர்தல் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. இதில் டெல்லி சட்ட சபை தேர்தல், ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தல் ஆகியவற்றுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கு பிப்ரவரி 7ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்கு வங்க மாநிலம், பங்காவ்ன் மக்களவைத் தொகுதி, சட்டப்பேரவைத் தொகுதிகளான ஸ்ரீரங்கம் (தமிழ்நாடு), கிருஷ்ணகஞ்ச் (மேற்கு வங்கம்), முகேத் (மகாராஷ்டிரம்), லிரோமோபா (அருணாசல பிரதேசம்), திருப்பதி (ஆந்திர பிரதேசம்), பனாஜி (கோவா) ஆகியவற்றுக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 13ம் தேதி நடைபெறவுள்ளது.

மக்களவை தேர்தல் அபாரம்
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்து மத்தியில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. குறிப்பாக டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. டெல்லியில் கடந்த ஓராண்டாக குடியரசுச் தலைவர் ஆட்சி அமலில் இருந்து வந்தது. இந்நிலையில், டெல்லி சட்டசபை கலைக்கப்பட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

பாஜக தேர்தல் குழு கூட்டம்
டெல்லி பேரவைத் தேர்தலில் வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மியும், காங்கிரஸம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளன. ஆனால், பாஜக இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில், பாஜகவின் தேர்தல் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தில் தனித்து போட்டி?
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்ததைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் பாஜக போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான வியூகத்தையும் அக்கட்சி அமைத்து வருகிறது.

இன்று இரவு
கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், கட்சியின் தேர்தல் குழுக் கூட்டம் திங்கள்கிழமை மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. அதில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல், பிற மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் வியூகம் ஆகியன குறித்து விவாதிக்கப்படும் என்றார்.

கிரண் பேடி முதல்வர் வேட்பாளரா?
டெல்லி முதல்வர் வேட்பாளராக, சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடியை அறிவிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications