For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபாவில் பாஜக பெரும்பான்மையை இழந்துவிட்டது: காங். விளாசல்

லோக்சபாவில் பாஜக பெரும்பான்மையை இழந்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    லோக் சபா குறித்து பாஜகவை விளாசும் காங்கிரஸ்

    டெல்லி: லோக்சபாவில் பாஜக பெரும்பான்மையை இழந்துவிட்டது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.

    இது தொடர்பாக சுர்ஜிவாலா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

    BJP lost simple majority in LS, says Cong.

    2017, 2018-ல் நடைபெற்ற 10 லோக்சபா தொகுதி இடைத் தேர்தல்களில் பாஜக தோல்வியைத் தழுவியுளது. பாஜகவின் அகம்பாவம், முறைகேடான ஆட்சி மீது மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

    2017-ம் ஆண்டு அமிர்தசரஸ், ஸ்ரீநகர், மலப்புரம், குருதாஸ்பூர் இடைத்தேர்தல்களிலும் இந்த ஆண்டு ஆஜ்மீர், ஆல்வார், உலுபேரியா, கோரக்பூர், புல்பூர் இடைத் தேர்தல்களிலும் பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது.

    2014-ம் ஆண்டு மே மாதம் பாஜக லோக்சபா தேர்தலில் 282 இடங்களில் வென்றது. கடந்த 4 ஆண்டுகளில் பாஜகவின் லோக்சபா பலம் 271 ஆக குறைந்துவிட்டது. லோக்சபாவில் பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்துவிட்டது.

    பாஜகவின் கீர்த்தி ஆசாத் எம்பி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். சத்ருகன் சின்ஹாவும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆகையால் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை.

    இவ்வாறு சுர்ஜிவாலா பதிவிட்டுள்ளார்.

    English summary
    Congress spokesperson Randeep Singh Surjewala tweets, "In May 2014, the BJP won 282 Lok Sabha seats. In four years, the BJP is down to 271".
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X