For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முஸ்லிம் பெண்களை தெருவில் கற்பழித்து தூக்கிலிடுங்கள்.. பாஜக பெண் தலைவர் அசிங்க பேச்சு.. சஸ்பெண்ட்!

சர்ச்சை கருத்து வெளியிட்ட பாஜக பெண் நிர்வாகி சுனிதா சிங் கவுர் பதவி பறிக்கப்பட்டது

Google Oneindia Tamil News

Recommended Video

    Sunitha Singh gaur | முஸ்லிம் பெண்களை கற்பழித்து தூக்கிலிடுங்கள்: பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை

    லக்னோ: "முஸ்லிம் பெண்களை தெருவில் நிற்க வைத்து அவர்களை கற்பழித்து, அதற்கு பிறகு தூக்கில் தொங்கவிட வேண்டும், அப்போதுதான் இந்த முஸ்லீம்களுக்கு ஒரு முடிவு கட்ட முடியும்" என்று கொஞ்சமும் ஈவிரக்கமில்லாமல் பேசிய பாஜக பெண் தலைவரை அக்கட்சி அதிரடியாக நீக்கி உள்ளது.

    உத்தரப்பிரதேசத்தின் ராம்கோலா நகர பாஜக மகளிரணியின் தலைவர் சுனிதா சிங் கவுர். இவர் போன மாசம் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டிருந்தார்.

    BJP Mahila Morcha leader Sunitha Singh Gaur expelled

    அதில், "முஸ்லீம்களுக்கு ஒரே ஒரு முடிவு மட்டுமே உள்ளது. இந்து சகோதரர்கள் 10 பேர் கொண்ட குழுவை உருவாக்கி, முஸ்லிம் தாய்மார்கள் மற்றும் பெண்களை தெருவில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும்.

    பின்னர், அவர்களை மற்றவர்கள் பார்க்கும் விதமாக தூக்கில் தொங்கவிட வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார். அதுவும் இந்தி மொழியில்தான் இந்த பதிவினை போட்டிருந்தார். இந்தியாவை பாதுகாக்க இப்படிதான் செய்ய வேண்டும் என்றும் சுனிதா தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், பலதரப்பிலும் அதிர்ச்சியையும் உண்டாக்கியது. இவரது இந்த பதிவு இணையத்தில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு, வைரலானது.

    இந்நிலையில், அகமதாபாத் மிரர் பத்திரிகையின் ஆசிரியர் தீபால் திரிவேதி இதுதொடர்பாக பதிவிட்ட ட்வீட்டுக்கு பாஜக சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், சுனிதாவை பாஜக பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளதாக அறிவித்துள்ளது.

    பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவர் விஜயா ரஹாத்கர், "பாஜக மகளிர் அணி, இது போன்ற வெறுப்பு கருத்துக்களை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. அந்தப்பெண் நீங்கள் ட்வீட் செய்யப்படும் முன்பே கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்" என்று கூறியுள்ளார்.

    English summary
    BJP Mahila Morcha leader Sunitha Singh Gour has suspended for her controversy tweet
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X