குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சிதான்... 'காங்கிரஸ்' சர்வேயால் ராகுல் ஷாக்
அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் அனுப்பி வைத்த கருத்து கணிப்பால் காங்கிரஸ் மேலிடம் அதிர்ந்து போயுள்ளதாக கூறப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத்தில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் பதவியில் இருந்து ஆனந்திபென் விலகினார். புதிய முதல்வராக விஜய்ரூபானி பதவியேற்றார்.
இதனிடையே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதில் பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளும் மும்முரமாக உள்ளன. குஜராத் சட்டசபையில் மொத்தம் 182 தொகுதி இடங்கள் உள்ளன.

2012-ல் நிலவரம்
இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 92 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். 2012-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 182 தொகுதிகளில் பா.ஜ.க. 123 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சிக்கு 56 இடங்களே கிடைத்தன.

97 இடங்களில் பாஜக
தற்போது தங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று காங்கிரஸ் கட்சி பிரத்யேகமாக ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. அதில் 97 தொகுதிகளில் பா.ஜ.க. வுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

100% வெற்றி
குறிப்பாக இந்த 97 தொகுதிகளில் 52 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி உறுதி என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலை விட சற்று கூடுதல் இடம் கிடைக்கலாமாம்.

மேலிடம் அதிர்ச்சி
சொந்த கட்சியினர் நடத்திய சர்வேயில் பாஜகதான் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டிருப்பதால் காங்கிரஸ் மேலிடம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications