டெல்லியில் வீட்டு வாசலில் வைத்து பாஜக எம்.எல்.ஏ.வை நோக்கி சுட்ட மர்ம ஆசாமி
டெல்லி: டெல்லியில் உள்ள விவேக் விஹார் பகுதியில் வசிக்கும் பாஜக எம்.எல்.ஏ. ஜிதேந்தர் சிங் ஷன்ட்டியை அவரது வீட்டுக்கு முன்பு வைத்து மர்ம நபர் துப்பாக்கியால் சுட முயன்றார். நல்லவேளையாக அவர் மீது குண்டு எதுவும் படவில்லை
பாஜக எம்.எல்.ஏ. ஜிதேந்தர் சிங் ஷன்ட்டி கிழக்கு டெல்லியில் உள்ள விவேக் விஹாரில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை 6 மணிக்கு அவரது வீட்டு அழைப்பு மணியை யாரோ தொடர்ந்து அழுத்தியுள்ளனர். அழைப்பு மணி சத்தம் கேட்டு ஷன்ட்டி வெளியே வந்தபோது மர்ம நபர் ஒருவர் அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். மற்ற இருவர் பைக் ஒன்றில் அமர்ந்திருந்தனர்.
சில ஆவணங்களில் கையெழுத்து வேண்டும் என்று அந்த நபர் ஷன்ட்டியிடம் தெரிவித்தார். ஷன்ட்டி அந்த ஆவணங்களை வாங்கிக் கொண்டு கையெழுத்திட வீட்டுக்குள் செல்ல முயன்றபோது அந்த நபர் துப்பாக்கியை எடுத்தார். இதை பார்த்த ஷன்ட்டி அவர் துப்பாக்கியால் சுடுவதை தடுக்க முயன்றார். இருப்பினும் அந்த மர்ம ஆசாமி ஷன்ட்டியை நோக்கி 3 முதல் நான்கு முறை சுட்டார்.
அதில் ஒரு குண்டும் ஷன்ட்டி மீது படவில்லை. இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் ஷனட்டி வீட்டுக்கு வெளியே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஷாதரா தொகுதி எம்.எல்.ஏ.வான அவரை கடந்த 2007ம் ஆண்டு மர்ம ஆசாமி தாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications