"கோமியம்".. இப்போ அடுத்த சர்ச்சை.. எம்பி பிரக்யா சிங்கா இது?.. வெளியானது வீடியோ.. ஷாக்
போபால்: வாயை திறந்தாலே சர்ச்சையாக பேசுவாரே எம்பி பிரக்யா சிங் தாக்குர், அவர் இப்போது ஒரு விவகாரத்தில் சிக்கி உள்ளார்..!
பாஜகவின் மூத்த தலைவர் பிரக்யா சிங்.. போபால் மக்களவை தொகுதி பாஜக எம்பி.. எத்தனையோ சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர்.
நாதுராம் கோட்சே ஒரு தேசப்பக்தராக இருந்தவர்.. இருக்கிறார்.. இன்னும் இருப்பார்.. அவரை தீவிரவாதி என்று ஏன் சொல்கிறீர்கள் என்ற பிரக்யாவின் பேச்சை நாடே உற்றுநோக்கியது. "பிராமணர்களை" ஜாதி சொல்லி கூப்பிடலாம்.. ஆனால் "சூத்திரர்" என்று கூப்பிட்டால் தப்பா? என்று கேள்வி கேட்டவர்.

வீடியோ
அதுமட்டுமல்ல, நான் தினமும் மாட்டு கோமியம் குடிக்கிறேன்.. நாட்டு பசுவின் கோமியத்தை குடிப்பதால் வேறு மருந்துகளை நான் சாப்பிடுவதும் இல்லை. பசுமாட்டு கோமியத்தை கடவுளை பிரார்த்தித்து குடித்தால் நமக்கு எந்த நோயும் வராது என்று சொல்லி, அந்த கொரோனாவுக்கே ஜெர்க் தந்தவர்.

தண்டனை
இவர், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்தவர்.. ஜாமீனில்தான் வெளியே வந்துள்ளார். ஆனாலும், இது தொடர்பான வழக்கு இன்னமும் கோர்ட்டில் நடந்து வருகிறது.. ஆனால், ஒருமுறை கூட கோர்ட்டுக்கு போவதே கிடையாது.. தன் சம்பந்தப்பட்ட வழக்கு என்றாலும் ஆஜராவதும் கிடையாது.. எப்போது கேட்டாலும் உடம்பு சரியில்லை என்று ஆஜராகாமலேயே இருந்தார்.

விலக்கு
"என்னால், எழுந்து நடக்ககூட முடியல. நான் எப்படி கோர்ட்டுக்கு வர முடியும்" என்று சொல்லி, ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்று வந்தார். அதற்கேற்றபடி சக்கர நாற்காலியில் இவர் உட்கார்ந்திருப்பதை பார்த்ததும், அதிகாரிகள் நிஜமாகவே உடம்பு சரியில்லை என்று நம்பி கொண்டிருந்தனர்.. ஆனால், ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. இவர் உறவினர்களான இரட்டை சகோதரிகளுக்கு ஒரே நாளில் சமீபத்தில் கல்யாணம் நடந்துள்ளது..

ஏற்பாடுகள்
இந்த கல்யாணத்துக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் பிரக்யா சிங் தாக்குர்தான் செய்திருக்கிறார்.. அதுமட்டுமல்ல, அந்த கல்யாண ஊர்வலத்தில் பிரக்யா, டான்ஸ் ஆடி உள்ளார்.. சில பெண்களுடன் சேர்ந்து உற்சாகமாகவே டான்ஸ் ஆடி உள்ளார்.. எம்பி டான்ஸ் ஆடும் இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக வைரலாகி கொண்டிருக்கிறது.. பல வருஷமாகவே வீல் சேரில் வலம்வந்து கொண்டிருந்தவர், திடீரென டான்ஸ் ஆடியதும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியானது..

வீடியோ
இந்த வீடியோவை வைத்து காங்கிரஸ் கட்சியினர் இப்போதே கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது மட்டுமல்ல, கடந்த வாரமும் இப்படி ஒருவீடியோ வெளியானது.. அதில் பிரக்யா, கூடைப்பந்து மைதானத்தில், பறந்து பறந்து விளையாடி, குறிபார்த்து கோல் செய்த வீடியோவும் வெளியானது.. அப்போதே இதுகுறித்து யாரும் விசாரிக்கவில்லை.. நடவடிக்கையும் எடுக்கவில்லை.. இந்த டான்ஸ் வீடியோ அடுத்ததாக வெளியாகி உள்ளது..!
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications