பாஜக மாணவர் அமைப்பை எதிர்த்த கார்கில் மாவீரரின் மகளை தாவூத்துடன் ஒப்பிட்ட பாஜக எம்பி!
ஏபிவிபியை எதிர்த்ததால் கார்கில் மாவீரரின் மகளை நிழல் உலக தாதா தாவூத்துடன் ஒப்பிட்டு அவமதித்துள்ளார் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா.
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏபிவிபியை எதிர்த்ததால் கார்கில் மாவீரர் கேப்டன் மன்தீப் சிங்கின் மகள் குர்மேகர் கவுரை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா ஒப்பிட்டிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.பி.வி.பி.க்கு எதிராக பிரசாரம் செய்ததால் தமக்கு பலாத்கார மிரட்டல் வருவதாக டெல்லி பல்கலைக் கழக மாணவியான சிங் மகளுமான குர்மேகர் கவுர் அதிர்ச்சி தகவலை தெரிவித்திருந்தார். அத்துடன் தமது சமூக வலைதள பக்கங்களில் ஏபிவிபிக்கு எதிரான வாசகங்களை ஏந்திய படங்களையும் பதிவிட்டுள்ளார்.
— Pratap Simha (@mepratap) February 26, 2017
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் கர்நாடகா மாநிலம் குடகு எம்.பி.யான பிரதாப் சிம்ஹா, தாவூத் இப்ராகிமுடன் குர்மேகர் கவுரை ஒப்பிட்டு தமது ட்விட்டரில் படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ராணுவ வீரரின் மகள் குர்மேகர் கவுர், போலீஸ்காரரின் மகன் தாவூத் இப்ராகிம் என ஒப்பிட்டிருக்கிறார்.
Who's polluting this young girl's mind? A strong Arm Force prevents a war. India never attacked anyone but a weak India was always invaded. https://t.co/gXHkAGi9sh
— Kiren Rijiju (@KirenRijiju) February 27, 2017
அத்துடன் தாவூத் இப்ராகிம் ஒருபோதும் தம்முடைய தேசவிரோத நடவடிக்கைக்காக அவருடைய தந்தையின் பெயரை பயன்படுத்தியது இல்லை எனவும் சாடியுள்ளார் பிரதாப் சிம்ஹா. அதேபோல் மத்திய அமைச்சர் கிரென் ரிஜிஜூ, இந்த இளம் பெண்ணின் சிந்தனையை மாசுபடுத்தியது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக எம்.பி.யின் இந்த ஒப்பீட்டுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications