பாஜக எம்.பி.யின் மகனிடம் இருந்து ரூ.1.5 லட்சம் வாட்ச், பணத்தை கொள்ளையடித்த பெண் பாடிகார்ட்
மும்பை: மும்பையில் பாஜக எம்.பி.யின் மகன் மற்றும் அவரது என்.ஆர்.ஐ. நண்பரிடம் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த பெண் பாதுகாவலர் மற்றும் அவரது டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
உத்தர பிரதேசத்தில் உள்ள அம்ரோஹாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. கன்வர் சிங் தன்வாரின் மகன் மெஹர் சிங் தன்வார்(40). அவர் தனது என்.ஆர்.ஐ. நண்பருடன் மும்பை சான்டா க்ரூஸ் பகுதியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் தங்கியுள்ளார். அவர் பாதுகாவலர்களை அனுப்பும் ஏஜென்சியை அணுகி பெண் பாதுகாவலரை தனது ஹோட்டல் அறைக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
அதற்கு ஏஜென்சிகாரர்கள் பெண் பாதுகாவலரை அனுப்பி வைக்கிறோம். ஆனால் நீங்கள் ஹோட்டலுக்கு வெளியே வந்து அவரை சந்தித்து ஊதியப் பணத்தை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஒரு பெண் மற்றும் அவரது டிரைவர் ஆகியோர் இரவு 1 மணிக்கு ஹோட்டலுக்கு வந்து மெஹர் மற்றும் அவரது நண்பரை ஹோட்டலில் இருந்து வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் வெளியே வந்தவுடன் அவர்களின் வயிற்றில் கத்தியை வைத்து ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம், பணத்தை கொள்ளையடித்துவிட்டு அவர்கள் காரில் தப்பியோடிவிட்டனர்.
இந்த சம்பவம் பற்றி மெஹர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications