ஜன. 24-ல் பாஜக தேசியத் தலைவர் தேர்தல்.....மீண்டும் அமித்ஷா தேர்வு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் தேர்தல் வரும் 24-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தற்போதைய தலைவர் அமித்ஷாவே மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

பாஜகவின் தற்போதைய தலைவர் அமித் ஷாவின் பதவிக் காலம் வரும் 23-ந் தேதியுடன் நிறைவடைகிறது. பாஜக தலைவராக இருந்த ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சரானார்.

amitshah

இதனால் பாஜக தலைவர் பதவியை கடந்த 2014-ஆம் ஆண்டு அவர் ராஜினாமா செய்தார். பாஜக விதிகளின்படி பாஜக தலைவரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகளாகும்.

ராஜ்நாத் சிங் பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற ஓராண்டில் ராஜினாமா செய்ததால், மீதமுள்ள 2 ஆண்டுகளுக்கு அமித் ஷா தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், வரும் 23-ஆம் தேதியுடன் அந்தப் பதவிக் காலம் நிறைவடைய உள்ளது. ஆகையால் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்காக தேர்தலை பாஜக தலைமை அறிவித்துள்ளது.

பாஜக தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிட விரும்புபவர்கள், வரும் 24-ந் தேதி டெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என்று பாஜக தேர்தல் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒன்றுக்கும் மேற்பட்டோர் வேட்பு மனுத் தாக்கல் செய்தால் ஜனவரி 25-ல் தேர்தல் நடத்தப்பட்டு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதைய தலைவர் அமித்ஷாவே பாஜகவின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றே அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+