பாஜக அலுவலகத்தை தாக்கிய வழக்கு.. ஹர்திக் பட்டேலுக்கு 2 ஆண்டு சிறை.. குஜராத் ஹைகோர்ட் அதிரடி
பாஜக அலுவலகத்தை தாக்கிய வழக்கில் குஜராத் பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேலுக்கு 2 வருட சிறை தண்டனை வழங்கப்பட்ட இருக்கிறது.
அஹமதாபாத்: பாஜக அலுவலகத்தை தாக்கிய வழக்கில் குஜராத் பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேலுக்கு 2 வருட சிறை தண்டனை வழங்கப்பட்ட இருக்கிறது.
2015ல் குஜராத் முழுக்க பட்டேல் ஜாதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் போராட்டம் செய்தனர். இதில் பெரும்பாலான இடங்களில் போராட்டத்தை, பட்டேல் குழுவில் இளம் தலைவர் ஹர்திக் பட்டேல் முன்னின்று நடத்தினார்.

அந்த போராட்டத்தின் போது, விஸ்நகரில் இருந்த பாஜக கட்சியின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. இதில் சிலருக்கு மோசமான காயம் ஏற்பட்டது. இதில் ஹர்திக் பட்டேல் உட்பட 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவர் மீது பெயிலில் வராத வகையில் வழக்கு போடப்பட்டது. ஆனால் குஜராத் உயர்நீதிமன்றம் அதை ரத்து செய்து ரூ.5000 பிணையுடன் அவருக்கு பெயில் வழங்கி வழக்கை நடத்தியது. மேலும் 17 பேர் மீது வழக்கு விசாரணை நடக்கும் என்று கூறி மீதமுள்ளவர்களை விடுவித்தது.
இந்த நிலையில் தற்போது வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி குஜராத் பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேலுக்கு 2 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. ஹர்திக் பட்டேல் ஆதரவாளர்கள் 2 பேரும் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்று இருக்கிறார்கள்.
அதேபோல் ஹர்திக் பட்டேலுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றம் செல்வார் என்று கூறப்படுகிறது.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications