17ம் தேதி பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம்: மோடியே அடுத்த பிரதமர்- ராஜ்நாத் சிங்
அகமதாபாத்: பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, நிதின் கட்காரி ஆகியோர் புதன்கிழமை டெல்லியில் இருந்து குஜராத் சென்றனர். அவர்கள் காந்திநகரில் பாஜக பிரதமர் வேட்பாளரான மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.

அப்போது வரும் 17ம் தேதி பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு என்ன பொறுப்பு வழங்கலாம் என்பது பற்றியும் ஆலோசித்துள்ளனர்.
கூட்டத்திற்கு பிறகு ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
17ம் தேதி பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாஜக நாடாளுமன்ற குழு தலைவராக மோடியை எப்பொழுது தேர்வு செய்வது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
பாஜகவுக்கு நிச்சயம் பெரும்பான்மை கிடைக்கும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளன. நரேந்திர மோடி தான் அடுத்த பிரதமர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications