ஈராக்கில் சிக்கியிருந்த இந்தியர்களை பத்திரமாக மீட்ட மோடி அரசுக்கு பாஜக பாராட்டு
டெல்லி: ஈராக்கில் சிக்கியிருந்த இந்தியர்களைப் பத்திரமாக மீட்டதற்காக மோடி அரசை பாஜக பாராட்டியுள்ளது.
ஈராக் நாட்டில் அரசை எதிர்த்து, ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். இதனால் பணி நிமித்தமாக ஈராக் சென்றுள்ள இந்தியர்கள் பலர் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர். அவர்களைப் பத்திரமாக மீட்கும் முயற்சியில் தொடர்ந்து மத்திய அரசு ஈடுபட்டு வந்தது.

இதற்கிடையில், மறைந்த முன்னாள் அதிபர் சதாம் உசைனின் சொந்த ஊரான திக்ரித் நகரில் பணியாற்றிய 46 இந்திய நர்சுகளை தீவிரவாதிகள் கடந்த வியாழனன்று தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மொசூல் நகருக்கு கடத்திச் சென்றனர்.
இதனால் இந்திய நர்சுகளின் உயிருக்கு ஆபத்து உண்டாகலாம் என்ற அச்சம் நிலவியது. அதனைத் தொடர்ந்து அந்த நர்சுகளை பத்திரமாக மீட்கும் நடவடிக்கையில் இந்திய வெளியுறவுத் துறை ஈடுபட்டது.
மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக இந்திய நர்சுகள் 46 பேரையும் ஐ,எஸ்.ஐ.எஸ்.ஐ விடுதலை செய்தது. நேற்று அவர்கள் தனி விமானம் மூலம் பத்திரமாக தாயகம் திரும்பினர். இந்த விமானத்தில் நர்சுகள் தவிர மேலும் 137 இந்தியர்களும் ஈராக்கில் இருந்து இந்தியா வந்து சேர்ந்தனர்.
இதற்காக நரேந்திரமோடி தலைமையிலான அரசை, பாரதீய ஜனதா கட்சியின் பத்திரிகை தொடர்பாளர் ஸ்ரீகாந்த் சர்மா பாராட்டி உள்ளார். வெளியுறவுத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து மேலும் அங்கு தவிக்கும் இந்தியர்களை மீட்டு தாயகம் திரும்ப உதவி செய்யும் என்று நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்












Click it and Unblock the Notifications