பாட்லா ஹவுஸ் என்கவுண்ட்டர் விவகாரம்: சோனியா வீடு முன்பு பாஜக போராட்டம்
டெல்லி: சர்ச்சைக்குரிய டெல்லி பாட்லா ஹவுஸ் என்கவுண்ட்டர் விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கருத்துக்கு எதிராக அக்கட்சித் தலைவர் சோனியா காந்தியின் வீட்டை முற்றுகையிட்டு பாரதிய ஜனதா கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர்.
2008-ம் ஆண்டு டெல்லியில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 30 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்ட 6 நாட்கள் கழித்து டெல்லி பாட்லா ஹவுஸ் குடியிருப்பில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ஷாஜத் என்ற தீவிரவாதி தப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த மோதலில் ஷாஜத் சுட்டதில் காவல்துறை ஆய்வாளர் சந்த் சர்மா உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த என்கவுண்ட்டர் போலியானது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் அப்போது கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த வாரம் ஐஎஸ் இயக்கத்தின் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் அந்த வீடியோவில் பாட்லா ஹவுஸ் என்கவுண்ட்டரில் இருந்து தப்பிய ஷாஜத் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனால் பாட்லா ஹவுஸ் என்கவுண்ட்டர் விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுத்தது. இருப்பினும் தாம் தெரிவித்த கருத்தில் எந்த மாற்றமும் இல்லை; இந்த என்கவுண்ட்டர் குறித்து மத்திய அரசு உரிய நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார் திக்விஜய்சிங். இருப்பினும் காங்கிரஸ் கட்சி மேலிடமோ இது திக்விஜய்சிங்கின் தனிப்பட்ட கருத்து என ஒதுங்கிக் கொண்டது.

இந்நிலையில் திக்விஜய்சிங்கின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டை முற்றுகையிட்டு இன்று பாஜகவின் போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சி தீவிரவாதத்துக்கு உதவுவதாக கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
-
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு












Click it and Unblock the Notifications