லாலு லொள்ளு தாங்க முடியலையே.. மோடியைப் பார்த்து "என்ஆர்ஐ" என கிண்டல்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை வெளிநாடு வாழ் இந்தியர் என்று கிண்டலடித்துள்ளார் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிறைக்கு வெளியே இருந்து கொண்டு, தனது சிறைத் தண்டனையை ரத்து செய்யப் போராடி வரும் ஒரு நபர் கூறுவதையெல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்று பாஜகவும் பதிலடி கொடுத்துள்ளது.

பிரதமர் மோடி 3 நாள் வெளிநாட்டுப் பயணத்தில் உள்ளார். இதை கிண்டலடித்துக் கருத்துத் தெரிவித்திருந்தார் லாலு பிரசாத் யாதவ். லாலு கூறுகையில், நமது பிரதமர் வெளிநாடு வாழ் இந்தியர் ஆகி விட்டார். இந்த நாட்டின் பிரதமராகவே அவர் இல்லை. என்.ஆர்.ஐ ஆகி விட்டார். அவரது செல்வாக்கு வெளிநாடுகளில் பெருகி வருவதாக ஊடகங்களும் செய்தி வெளியிடுகின்றன. நமது எல்லையில் பிரச்சினை உள்ளது. ஆனால் பிரதமரோ நாட்டிலேயே இல்லை.
கருப்புப் பணத்தை 100 நாட்களுக்குள் கொண்டு வருவோம் என்று சவால் விட்டிருந்தது பாஜக அரசு. ஆனால் அப்படி எதையும் கொண்டு வரவில்லை.
சுத்த பாரதம் என்ற பெயரில் போட்டோ எடுத்துக் கொள்வதற்காகவே ஒரு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர் பாஜகவினர் என்று கூறியிருந்தார் லாலு.
இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் லாலுவையும் வாரியுள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நலின் கோஹ்லி கூறுகையில், லாலுவே சிறையிலிருந்து வெளியே இருக்கிறார். தனது சிறைத் தண்டனையை ரத்து செய்ய போராடிக் கொண்டிருக்கிறார். வீட்டோடு முடங்கிப் போயிருக்கிறார். இவரால் இனிமேல் ஆட்சியே நடத்த முடியாது.
கால்நடைக்குப் போட்ட தீவணத்தைத் திருடியவர் இந்த லாலு பிரசாத். டூவீலரில் அவற்றை ஏற்றிக் கொண்டு போனவர். இவர் சொல்வதையெல்லாம் யாரும் பொருட்படுத்த மாட்டார்கள், பொருட்படுத்தவும் கூடாது என்று கூறியுள்ளார் கோஹ்லி.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!









Click it and Unblock the Notifications