வண்டிய ஜார்கண்ட் பக்கம் திருப்புங்க.. இலவசங்களை அள்ளி வீசிய பாஜக.. சூடுபறக்கும் தேர்தல் களம்
ராஞ்சி: நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கான எக்சிட் போல் முடிவுகளும் பாஜகவுக்கு சாதகமாக வரவில்லை. இந்நிலையில் விரைவில் நடக்கவுள்ள ஜார்கண்ட் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் முடிவுகள் நாளை மறுநாள் (அக்டோபர் 8) வெளியாக உள்ளது. முன்னதாக ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று மாலை 6 மணி முதல் வெளியாகி வருகிறது.

ஹரியானாவில் தொடர்ந்து மூன்றாவது முறை ஆட்சியமைக்க பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. மறுபக்கம் பாஜகவை வீழ்த்தி ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியும் பலத்த வியூகங்களை வகுத்து வருகிறது. பெரும்பாலான எக்சிட் போல் முடிவில் ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகவே தகவல் வெளியாகி வருகிறது.
அதேபோல, ஜம்மு காஷ்மீரிலும் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்க வாய்ப்புள்ளதாக எக்சிட் போல் முடிவுகள் கூறுகின்றன. ஜம்மு மாகாணத்தில் பாஜக அதிக சீட்களை கைப்பற்றினாலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டு ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்படுத்தும் என்று தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல், வருகிற டிசம்பர் மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அங்கு மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தேர்தல் ஆணையம் விரைவில் ஜார்கண்ட் தேர்தல் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
அங்கு எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பாஜக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. முன்னதாக ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்சா 30 தொகுதிகளிலும், பாஜக 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன.
ஜார்கண்ட் தேர்தல் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே, பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. பான்ச் பிராணா என்ற பெயரில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதில் பிரதானமாக ஐந்து வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி பெண்களுக்கு பொருளாதார உதவி வழங்கும் விதமாக மாதம் ரூ.2,100 வழங்குவது, ஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது, அனைவருக்கும் வீடு கட்டி தருவது உள்ளிட்ட திட்டங்களை அறிவித்துள்ளனர்.
மேலும், போட்டி தேர்வுக்கு தயாராகும் வகையில் பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும் என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். அரசு நிர்வாகத்தில் காலியாக உள்ள இரண்டு லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்றும் சொல்லியுள்ளனர்.
அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.500க்கு சமையல் எரிவாயு வழங்குவதுடன், ஆண்டுக்கு பண்டிகை காலங்களில் இரண்டு சமையல் எரிவாயு இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இலவச திட்டங்களை பாஜக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தேர்தலிலும் பாஜக - ஜார்கண்ட் முக்தி மோர்சா இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தயாராகும் வகையில் பாஜக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
உடனே சென்னை வாங்க.. அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் விரையும் அண்ணாமலை.. பாஜக போட்ட உத்தரவின் பின்னணி -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி












Click it and Unblock the Notifications