'வளர்ச்சிக்கு முக்கியத்துவம்' .... பீகார் சட்டசபை தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க உறுதி
பாட்னா: பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்போம் என்று பாரதிய ஜனதா கட்சி தமது தேர்தல் அறிக்கையான தொலைநோக்கு ஆவணத்தில் உறுதி அளித்துள்ளது.
பீகாரில் அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 8-ந் தேதி எண்ணப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றிவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் களத்தில் நிற்கிறது பா.ஜ.க.. அக்கட்சியில் தேர்தலில் போட்டியிட பலருக்கும் வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தி வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த உட்கட்சி மோதலை சமாளிப்பதற்காக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா பீகாரில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை நிதி அமைச்சர் அருண்ஜேட்லி இன்று வெளியிட்டார்.
பீகாரின் வளர்ச்சியை இலக்காக கொண்டு இந்த தொலைநோக்கு ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. பீகாரில் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம்; ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தால் நிலையான நிர்வாகத்தை வழங்க முடியவில்லை. பீகாரை ஆண்ட 40 ஆண்டுகால காங்கிரஸ், 15 ஆண்டுகால ஆர்.ஜே.டி (ராஷ்டிரிய ஜனதா தளம்), 10 ஆண்டுகளாக ஜேடியூ (ஐக்கிய ஜனதா தளம்) அரசுகளால் பீகார் வளர்ச்சி அடையவே இல்லை. இந்த நிலைமையை முற்றாக மாற்றுவோம் என்ற உறுதிமொழியும் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பீகாருக்கான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் மத்திய அரசு அளிக்கும். எங்களுக்கு பெரும்பான்மை கிடைத்தால் இந்த தொலைநோக்கு ஆவணத்தில் உறுதி அளித்துள்ள வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்களை நிறைவேற்றுவோம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.,
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?









Click it and Unblock the Notifications