தமிழகம் தேறாது.. கேரளத்தையாவது பிடிப்போம்.. நாடாளுமன்ற தேர்தலை குறி வைக்கும் பாஜக
தென்னிந்தியாவில் கால் பதிக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2019ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் அதிக இடங்களை பிடித்துவிட துடியாய் துடிக்கிறது.
டெல்லி: தமிழகத்தில் கால் பதிக்க பாஜகவால் முடியாத நிலையில் கேரளாவில் தங்களுக்கான இடத்தைப் பிடித்துக் கொள்ள பாஜக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தென்னிந்தியாவில் கால் பதிக்க முதலில் பாஜக தேர்ந்தெடுத்த இடம் புதியதாக உருவான தெலுங்கானா மாநிலம். அடுத்ததாக பாஜக அடுத்த பார்வையை தென்னிந்தியாவில் உள்ள கேரளா மீது வீசியுள்ளது.
கேரளாவை கைப்பற்றுவதற்கான வேலைகளை வேகமாக செய்து வருகிறார் அமித்ஷா. குறிப்பாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுற்றுப் பயணம்
அதற்கான தொடர் வேலைகளின் ஒரு பகுதியாக அமித்ஷா கேரளாவிற்கு 3 நாள் சுற்றுப்பயணமாக வர உள்ளார். மாட்டிறைச்சிக்கு தடை என்ற மத்திய அரசின் உத்தரவால் கொதித்துப் போயுள்ள கேரளாவிற்கு அமித்ஷா வர உள்ளது கடுமையான எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிஷப்புடன் சந்திப்பு
கேரளாவிற்கு வரும் அமித்ஷா கொச்சியில் உள்ள பிஷப்பை சனிக்கிழமை சந்திக்க உள்ளார். இதன் மூலம் இரு சமூகத்தினிடையே உறவை ஏற்படுத்தும் முகமாக அவர் செயல்படுவதாகக் கூறப்பட்டாலும் கேரளாவில் 18 சதவீதம் கிறிஸ்தவர்களின் வாக்கு வங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் குறி
கேரளாவில் 2019ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் குறி வைத்து வேலை செய்கிறது பாஜக. அதற்கான படிப்படியான நகர்வுகளை செய்து வருகிறது. அதற்காகத்தான் மதத் தலைவர்களை சந்தித்து பிற மதங்களோடு பிணக்கம் இல்லாததது போல் காண்பிக்க அமித்ஷா முயற்சி செய்து வருகிறார்.

நம்பிக்கை
2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஒரே ஒரு எம்எல்ஏவை மட்டுமே பாஜக வென்றது. ஆனால் 16 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதால் பாஜக நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா












Click it and Unblock the Notifications