For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி போட்டியிடும் தொகுதி இன்று வெளியாகுமா? பாஜகவில் குழப்பம் நீடிப்பு!

By Mathi
|

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடும் தொகுதி பற்றி இன்று அறிவிப்பு வெளியாகுமா என்பது சந்தேகம் என கூறப்படுகிறது.

குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியிலும் குஜராத்தின் காந்திநகர் தொகுதியிலும் போட்டியிடுவார் என்று செய்திகள் வெளியாகி இருந்தன.

BJP's UP list unlikely today, suspense over seat for Modi to continue

ஆனால் வாரணாசி தொகுதி எம்.பி.யான முரளி மனோகர் ஜோஷியும் காந்திநகர் எம்.பி. அத்வானியும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இதனால் மோடி போட்டியிடும் தொகுதி எதுவாக இருக்கும் என்பதில் குழப்பம் நீடித்தது.

இந்நிலையில் பாஜகவின் 3வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்றும் அதில் மோடி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியில் இதுபற்றி ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில் இன்று மோடி போட்டியிடும் தொகுதிகள் பற்றிய அறிவிப்பு வெளியாவது சந்தேகமே என்கின்றனர் பாஜக நிர்வாகிகள்.

English summary
After a lack of consensus on its list of candidates to be fielded from Uttar Pradesh in the upcoming Lok Sabha elections, the Bharatiya Janata Party (BJP) may stop short of taking the final call at the meeting of its Central Election Committee on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X