தோல்வி பயத்தில் பிதற்றுகிறார் கெஜ்ரிவால்: பாஜக தாக்கு
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் கூறுவதாக பாஜக தெரிவித்துள்ளது.
டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சோதனையிட்டபோது அதில் 4 எந்திரங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு தான் வாக்குப்பதிவாகிறது என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். வாக்குப்பதிவு எந்திரங்களை யாரும் எதுவும் செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து பாஜக கூறுகையில்,
டெல்லி தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் கெஜ்ரிவால் உள்ளார். அதனால் தான் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பாஜகவுக்கு மட்டும் வாக்குப்பதிவாகுமாறு ஏதோ செய்துள்ளார்கள் என்று குற்றம் சாட்டுகிறார். தேர்தல் ஆணையம் மீதே குறை கூறியதன் மூலம் ஆம் ஆத்மி கட்சிக்கு மரியாதை அளிக்க தெரியாது என்பது தெரிகிறது.
இதே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தான் கடந்த 2013ம் ஆண்டு நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களில் வெற்றி பெற காரணமாக இருந்தது. அப்படி என்றால் கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏதாவது செய்து வெற்றி பெற்றாரா? இதற்கு அவர் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு











Click it and Unblock the Notifications