லோக்சபா தேர்தல் நிதி வசூல் ரூ.588 கோடி; செலவு ரூ.712 கோடி: பாஜக நம்பர் 1
டெல்லி: கடந்த நாடாளுமன்ற லோக்சபா தேர்தலின்போது, மற்ற தேசிய கட்சிகளைவிட பா.ஜ.க. அதிகமான தேர்தல் நிதியை வசூல் செய்துள்ளது. அதேபோல், தேர்தல் செலவு செய்ததிலும் பா.ஜ.க.வே முதலிடத்தில் உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலின் போது பெற்ற தேர்தல் நிதி மற்றும் செலவழித்த தொகை பற்றிய விவரங்களை சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருந்தது.
தேர்தல் முடிவுகள் வெளியான 90 நாட்களுக்குள், அதாவது கடந்த ஆண்டு ஆகஸ்டு 13-ஆம் தேதிக்குள் அந்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு கூறி இருந்தது. இருப்பினும், பகுஜன் சமாஜ் கட்சியைத் தவிர, பிற கட்சிகள் தாமதமாகவே விவரங்களை சமர்ப்பித்தன.
அந்த அரசியல் கட்சிகளில் பா.ஜ.க., காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகிய 6 தேசிய கட்சிகள் சமர்ப்பித்த விவரங்களை வைத்து 2 தொண்டு நிறுவனங்கள் ஆய்வு நடத்தி உள்ளன.

பாஜக முதலிடம்
அந்த ஆய்வில், தேர்தல் நிதி வசூலிலும், செலவு செய்ததிலும் பா.ஜனதா முதலிடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. பா.ஜ.க., 75 நாள் தேர்தல் பிரசார காலத்தில் பெற்ற தேர்தல் நிதி ரூ.588 கோடியே 45 லட்சம் ஆகும்.

செலவிலும் நம்பர் 1
தேர்தல் செலவுகளில், ரூ.712 கோடியே 48 லட்சம் செலவழித்து பா.ஜ.க.வே முதலிடத்தில் உள்ளது.

காங்கிரஸ் நம்பர் 2
அதே நேரம், காங்கிரஸ் கட்சி ரூ.350 கோடியே 39 லட்சம் வசூலித்து இரண்டாம் இடத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.486 கோடியே 21 லட்சம் செலவழித்து உள்ளது.

இ.கம்யூனிஸ்ட் ரூ.9 கோடி
தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.77 கோடியே 85 லட்சமும், பகுஜன் சமாஜ் கட்சி ரூ.77 கோடியே 26 லட்சமும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ரூ.9 கோடியே 52 லட்சமும் வசூலித்துள்ளன.

செலவில் பிற கட்சிகள்
தேசியவாத காங்கிரஸ் ரூ.64 கோடியே 48 லட்சமும், பகுஜன் சமாஜ் கட்சி ரூ.30 கோடியே 6 லட்சமும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ரூ.6 கோடியே 72 லட்சமும் செலவழித்துள்ளன.

4 மடங்கு அதிகரிப்பு
கடந்த 2004 ஆம் ஆண்டு தேர்தலின்போது, தேசிய கட்சிகள் பெற்ற மொத்த நிதி ரூ.223 கோடியே 80 லட்சம் ஆகும். 2009 ஆம் ஆண்டு தேர்தலில் இத்தொகை ரூ.854 கோடியே 89 லட்சமாக உயர்ந்தது. இதுவே கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ரூ.1,158 கோடியே 59 லட்சமாக உயர்ந்தது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் தேசிய கட்சிகளின் தேர்தல் நிதி வசூல், 4 மடங்கு அதிகரித்து இருப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications