நைட் கிளப்.. நேபாள பெண்கள்! பார்ட்டியில் ஆடிய ராகுல் காந்தி?.. பரபர வீடியோ.. உண்மையில் நடந்தது என்ன?
காத்மண்டு: காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்தி நேபாளத்தில் இரவு நேர கிளப் ஒன்றில் நடனம் ஆடியதாக புகார் எழுந்துள்ளது.
Recommended Video
காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் தலைவரை தேர்வு செய்வதற்கான குழப்பம் நிலவி வருகிறது. சமீபத்தில் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு மாற்றங்களை செய்ய பரிந்துரையை மேற்கொண்டார்.
பாஜகவை வீழ்த்துவது மட்டுமின்றி, மொத்தமாக காங்கிரஸ் கட்சியை எப்படி மாற்றுவது, காங்கிரசை எப்படி தேசிய அளவில் மீண்டும் பழைய இடத்திற்கு கொண்டு செல்வது என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை செய்தார்.

சேரவில்லை
காங்கிரஸ் கட்சியின் அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழுவில் இணைந்து தேர்தல் பொறுப்புகளை மேற்கொள்ள இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் இணையும் கோரிக்கையையும் பிகே மறுத்துவிட்டார். காங்கிரஸ் கட்சியில் அடிப்படை கட்டமைப்பு மாற்றம் வேண்டும். கட்சியின் அடிப்படை அமைப்பில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்து சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் தீவிர ஆற்றல் தேவை. நான் தேவை இல்லை, என்று பிகே விளக்கி உள்ளார்.

ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியில் இப்படி கட்டமைப்பு ரீதியிலான பிரச்சனை நிலவி வரும் நிலையில்தான் அதன் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்தி நேபாளத்தில் நைட் கிளப் ஒன்றில் கலந்து கொண்டதாக வீடியோ வெளியாகி உள்ளது. பாஜக மூத்த தலைவர்கள் அமித் மாள்வியா உள்ளிட்டோர் இந்த வீடியோவை பகிர்ந்து ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். அந்த வீடியோவில் இரவு நேர கிளப் ஒன்றில் ராகுல் காந்தி இருப்பது போல தெரிகிறது.

பெண்
அவருக்கு அருகில் சீனா அல்லது வடகிழக்கு மாநில தோற்றம் கொண்ட பெண் ஒருவர் நடனம் ஆடுவது பதிவாகி உள்ளது. இந்த நிலையில் அந்த பெண் நேபாளத்திற்கான சீன தூதர். அவருடன் சேர்ந்து ராகுல் காந்தி நடனம் ஆடிக்கொண்டு இருக்கிறார் என்று பாஜகவினர் புகார் வைத்துள்ளனர். பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தை காங்கிரஸ் கிண்டலடிக்கிறது. ஆனால் இப்போது அதே காங்கிரசின் ராகுல் நேபாளத்தில் கிளப்பில் ஆடிக்கொண்டு இருக்கிறார் என்று பாஜகவை சேர்ந்த அமித் மாள்வியா உள்ளிட்டோர் விமர்சனம் வைத்து வருகிறார்கள்.

உண்மை
இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது நேபாளி தோழியும், பத்திரிகையாளருமான சும்னிமா உடாஸ் என்ற பெண்ணின் திருமணத்திற்கு சென்றுள்ளார். அங்கு மரியாட் ஹோட்டலில் அவர் தங்கி உள்ளார். அந்த திருமண விழாவில் ராகுல் காந்தி நிற்கும் வீடியோதான் இப்படி வைரலாகி வருகிறது என்று காங்கிரஸ் நிர்வாகிகள் இணையத்தில் விளக்கம் அளித்துள்ளனர். ராகுல் காந்தி புகழை கெடுக்க வேண்டும் என்று தவறாக வீடியோவை பரப்புகிறார்கள் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் இணையத்தில் விளக்கம் அளித்துள்ளனர். இன்னும் சில இந்திய விவிஐபிக்களும் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications