கேரளாவில் பாஜக மாநில அலுவலகம் சூறை: பாஜக- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் அடிதடி
கேரளாவில் பா.ஜ.க.வினருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் இடையே நேற்றிரவு நடைபெற்ற மோதலில் பாஜக மாநில அலுவலகம் சூறையாடப்பட்டது.
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நேற்றிரவு பாஜகவின் மாநிலத் தலைமையகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களால் அடித்து சூறையாடப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் வீட்டை பாஜக தொண்டர்கள் தாக்கியுள்ளனர்.
கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இந்த மோதலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று இரு கட்சித் தலைவர்களும் தெரிவித்தாலும் அது முடிவின்றித் தொடர்கிறது.

கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட்(மா) கட்சியினருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை பவுடிகோனம் பகுதியில் இரு கட்சியினருக்கும் இடையே நடைபெற்ற மோதல் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.
வியாழக்கிழமையன்று இரவு, இரு கட்சியினருக்கும் இடையே மறுபடியும் மோதல் வெடித்துள்ளது. இம்மோதல் சம்பவத்தில் பாஜக மாநில அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் சூறையாடியுள்ளனர்.
இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் வீட்டின் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கல்லெறிந்ததில் வீட்டின் சன்னல் கண்ணாடிகளும், கார் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கின.
இதேபோல் இரு கட்சிகளைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர்களின் வீடுகளும் வாகனங்களும் தாக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் இரு கட்சித் தொண்டர்களுக்கிடையே மோதலும் நடைபெற்றுள்ளது. இதையடுத்துத் தலைவர்களின் வீடுகளுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
தேசிய விருது பெற்ற பிரபல காமெடி நடிகர் சலீம் குமார் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications