Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பா.ஜ.க. கையில் 52 சித்தரிக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள் - பட்டேல் போராட்டக்குழு பகீர் தகவல்

பட்டேல் இன தலைவர்களின் நற்பெயரைக் குலைக்க நிறைய ஆபாச வீடியோக்களை பா.ஜ.க வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: தங்கள் தலைவர்களின் மதிப்பைக் கெடுத்து தேர்தலில் ஓட்டுகளை திசைதிருப்ப பா.ஜ.க இன்னும் 52 ஆபாச படங்களை தயாரித்து வைத்திருப்பதாக பட்டேல் போராட்டக்குழு தெரிவித்து உள்ளது.

குஜராத்தில் வருகிற டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க இருக்கிறது. அங்கு இதுவரை 4 முறை வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க இந்த முறையும் வெற்றி பெற தீவிரமாக இயங்கி வருகிறது. இதுவரை பா.ஜ.க.,விற்கு ஆதரவாக இருந்த பட்டேல் இன மக்கள் 2015ம் ஆண்டு இட ஒதுக்கீடு கேட்டுப் போராடினர்.

இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்த இளைஞர் ஹர்த்திக் பட்டேலின் தலைமையில் பட்டேல்கள் திரண்டு உள்ளனர். இதனால் இந்த ஆண்டு மிகப்பெரிய பட்டேல் இன ஓட்டு வங்கி சிதற வாய்ப்பு உள்ளது. எப்படியாவது அங்கு வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சியிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

 கீழ்த்தரமான அரசியல்

கீழ்த்தரமான அரசியல்

இதனால் ஹர்த்திக் பட்டேலை தங்கள் வசம் இழுக்க என்னென்னவோ முயற்சிகள் பா.ஜ.க செய்தும் பலனளிக்கவில்லை. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஹர்திக் பட்டேல் இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ வெளியானது. இது பா.ஜ.க.,வின் கீழ்த்தரமான அரசியல் என்று ஹர்திக் பட்டேல் விமர்சித்து இருந்தார்.

 வேட்பாளர் தேர்வுக்கூட்டம்

வேட்பாளர் தேர்வுக்கூட்டம்

தலித் மக்களுக்காக போராடி வரும் ஜிக்னேஷ் மேவானியும் ஆண் பெண்ணுடன் இருப்பதில் என்ன தவறு. பிறரின் பாலியல் சுதந்திரத்தில் தலையிடுவது தவறு என்று ஹர்திக் பட்டேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று பா.ஜ.க வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் உயர்மட்டக் கூட்டம் நடந்து வருகிறது.

 பா.ஜ.க.,விடம் 52 வீடியோக்கள்

பா.ஜ.க.,விடம் 52 வீடியோக்கள்

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய பட்டேல் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் தினேஷ் பாம்பனியா, இதை நாங்கள் சட்டப்பூர்வமாக சந்திக்க உள்ளோம். ஹர்திக்கை போலியான கற்பழிப்பு புகாரில் மாட்டிவிட குஜராத் பா.ஜ.க திட்டமிட்டு உள்ளது. இது குறித்த ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. தேர்தலில் எங்கள் நற்பெயரைக் குலைத்து ஓட்டு வாங்குவதே அவர்களின் திட்டம். பட்டேல் இன போராட்டகுழுவின் முக்கியத்தலைவர்கள் இருப்பதுபோல 52 செக்ஸ் வீடியோக்களை தயாரித்து வைத்துள்ளது பா.ஜ.க என்று அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

 நான் அவன் இல்லை

நான் அவன் இல்லை

இந்நிலையில் நேற்று வெளியான பேட்டி ஒன்றில், அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல; அப்படியே அவர்கள் சொல்வது போல நானாக இருந்தாலும் 24 வயதான ஒரு இளைஞன் பெண்ணோடு இருப்பது தவறா ? அல்லது அதை அவர்களுக்குத் தெரியாமல் வீடியோ எடுப்பது தவறா? என்று ஹர்திக் பட்டேல் கேள்வி எழுப்பி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+