எச்சரிக்கை மணி அடிச்சாச்சு.. மோடியின் குஜராத்திலேயே பாஜக இப்படி தவழுகிறதே!
BJP struggling to get majority at PM Modi's own state, which is a warning bell for the party.
Recommended Video

டெல்லி: சர்வ வல்லமை படைத்த பிரதமர் என பாஜகவினரால் புகழப்படும் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் அவர் சார்ந்த பாஜக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
ஆரம்பத்தில் பாஜகவுக்கு சாதகமாக டிரெண்ட் வெளியான நிலையில் 9 மணிக்கெல்லாம் காங்கிரஸ் முன்னிலை பெற்றது. பின்னர் மெதுவாக பாஜக முன்னேறி வந்து சமநிலை போட்டியை ஏற்படுத்தியது.
10 மணி நிலவரப்படி பாஜக லேசான முன்னிலை பெற்றுள்ளது. இருப்பினும், இதுவும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.

திணறல்
நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமராகியுள்ளார். நான் இந்த மண்ணின் மகன் என குஜராத்தில் அவர் பிரச்சாரம் செய்தார். இருப்பினும், பாஜக நிலைமை மூச்சுதிணறிக்கொண்டுள்ளது.

பெரிய படிப்பினை
பாஜக தோற்கிறதோ அல்லது வெற்றி பெறுகிறதோ அது முக்கியமில்லை. பிரதமரின் சொந்த மாநிலத்தில், இந்த அளவுக்கு பாஜக நெருக்கடியை சந்தித்ததே அக்கட்சிக்கு ஒரு பெரிய படிப்பினைதான். இதன்பிறகாவது மத்தியில் ஆட்சி முறையில் பல மாற்றங்களை முன்னெடுத்தாக வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.

பொருளாதார கொள்கைகள்
பாஜகவின் சமீப கால பொருளாதார கொள்கைகள்தான், குஜராத்தில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 22 வருடகாலம் தொடர்ந்து பாஜக அங்கு ஆட்சி செய்த அதிருப்தியலைதான் இதற்கு காரணம் என்று பாஜகவினர் சொல்லி சமாளிக்க கூடும்.

காங்கிரஸ் பெரிய முன்னேற்றம்
ஆனால் மோடி அளவுக்கு மத்தியிலும், மாநிலத்திலும் பிரபலமான ஒரு தலைவர் இல்லாமல் காங்கிரஸ் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளதே பெரிய சாதனைதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மொத்தத்தில் குஜராத் டிரெண்ட் என்பது பாஜகவுக்கு ஒலிக்கப்பட்ட எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications