நாடாளுமன்றத்தில் தெலுங்கானா மசோதாவுக்கு ஆதரவு- பாஜக
Subscribe to Oneindia Tamil

தெலுங்கானா தனி மாநில மசோதாவை ஆந்திர சட்டசபை நிராகரித்து ஜனாதிபதிக்கே திருப்பி அனுப்பிவிட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு, நாடாளுமன்ற இறுதி கூட்டத் தொடரில் தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, தெலுங்கானா தனி மாநிலம் என்ற அடிப்படையில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் அனைத்து பகுதி மக்களின் நன்மையை உறுதி செய்யக் கூடிய தெலுங்கானா மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தால் பாஜக ஆதரிக்கும் என்றார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியாவை தெலுங்கானா தாயாக கருதி கோயில்கள் எல்லாம் கட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலும் கூட தெலுங்கானா மசோதாவை கொண்டு வருவது காங்கிரஸின் பொறுப்பு அல்லவா? ஏன் இந்த அரசியல் நாடகத்தை மத்திய அரசு நடத்துகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications