அண்ணாமலையின் ட்விட்டால் காரசார விவாதம் - 'சிறுவர் டி.வி. நிகழ்ச்சியில் பிரதமருக்கு அவமதிப்பு'
தமிழகத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த சிறுவர்கள் பங்கேற்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகள் இருவர் நிகழ்ச்சியில் செய்த 2 நிமிடம் 20 வினாடி உரையாடல் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இது பெரும் அரசியல் மோதலுக்கு வித்திட்டிருக்கிறது.
இந்தக் காணொளியை திமுகவின் தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தக் காணொளியில் ஒரு சிறுவர் கூறும்போது, "நம் நாட்டின் வளர்ச்சிக்கு எது தடையாக இருக்கிறது என்றால் அது கருப்பு பணம். அதனால் அனைத்து பணத்தையும் செல்லாது என்று சொல்லிவிடப் போகிறேன். அப்படி செய்தால் கருப்பு பணம் ஒழிந்துவிடும்" என்று சொல்லி சிரிக்கிறார். இப்படியாக அந்தக் காணொளி 2 நிமிடம் 20 வினாடி தொடர்கிறது.
- "நான் திராவிடத்தை நிராகரிக்கவில்லை; திராவிடம் பிளஸ் வேண்டுமென்கிறேன்" - அண்ணாமலை பேட்டி
- அண்ணாமலை VS செந்தில் பாலாஜி: ஊழல் தொடர்பாக ட்விட்டரில் தொடரும் மோதல்
இந்த விவகாரம் சம்பந்தமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் ஒரு ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில், பாரத பிரதமர் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி மத்திய இணையமைச்சர் முருகன் அவர்கள் கேட்டறிந்தார் என்றும் அது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.
https://twitter.com/annamalai_k/status/1482736172636213249
முன்னதாக திமுக தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் பகிர்ந்து இருந்து ட்வீட்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, அதில் மத்திய இணை அமைச்சர் முருகன் அவர்களை டேக் செய்து பாஜகவின் காயத்ரி ரகுராம் பதிவிட்டிருந்தார்.
"அவர்கள் குழந்தைகளுக்கும் பார்வையாளர்களுக்கும் அவமரியாதை செய்திகளை ஊட்டுகிறார்கள். இது போன்ற செயல்களை பெற்றோர்கள் ஊக்குவிக்கிறார்கள். நிகழ்ச்சி இயக்குனர்கள் பொறுப்பற்றவர்கள் என்றும், திமுக எம்.பி தனது அரசியல் ஆதாயத்துக்காக இதுபோன்ற வீடியோக்களை பகிர்ந்து கொள்கிறார்" என்றும் குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பதிவிட்டிருந்தார்.
https://twitter.com/BJP_Gayathri_R/status/1482704168360214536
இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு ட்வீட்கள் சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. புதிய விவாதத்தையும் உருவாக்கி இருக்கிறது.
பிற செய்திகள்:
- 'அன்பே, பெருமைப்படுகிறேன்' - விராட் கோலிக்காக அனுஷ்காவின் உணர்ச்சிப் பூர்வமான பதிவு
- உத்தரப்பிரதேச தேர்தல், இந்துத்துவத்துக்கு சமூக நீதி விடுக்கும் சவாலா?
- சகோதரியை மணந்த மன்னர்கள் - எகிப்து, கிளியோபாட்ரா பற்றி அறியப்படாத தகவல்கள்
- ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி மறுப்பு; தடுப்பூசி போடாததால் விரைவில் வெளியேற்றம்
- பிக்பாஸ் 5: ராஜூ, பிரியங்கா, பாவனி - இந்த சீசன் வெற்றியாளர் யார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?













Click it and Unblock the Notifications