வாக்கு எந்திரத்தில் பாஜக முறைகேடு செய்தது உண்மைதான்.. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளிவந்த மோசடி
மஹாராஷ்டிராவில் நடந்த சில தேர்தல்களில், வாக்களிக்கும் எந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டு இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

மும்பை: மஹாராஷ்டிராவில் நடந்த சில தேர்தல்களில், வாக்களிக்கும் எந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டு இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எந்த வேட்பாளருக்கு வாக்களித்தாலும் பாஜக கட்சிக்கு ஓட்டு விழும்படி முறைகேடு செய்யப்பட்டு உள்ளது.
வாக்களிக்கும் எந்திரத்தில் முறைகேடு செய்துதான் எப்போதும் பாஜக வெற்றிபெறுகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்து வருகிறது. குஜராத் தேர்தலிலும், திரிபுரா தேர்தலிலும் பாஜக அப்படித்தான் வெற்றிபெற்றது என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்தது.
இந்த நிலையில் மஹாராஷ்டிராவில் நடந்த தேர்தல் ஒன்றில் பாஜக கட்சி இப்படி முறைகேடு செய்தது அம்பலம் ஆகியுள்ளது. அதே சமயம் தேர்தல் ஆணையம் இதை பற்றி வெளியே பேசாமல் மூடி மறைத்தும் தெரியவந்துள்ளது.

எப்போது நடந்தது
கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி மஹாராஷ்டிராவில் உள்ள ''சிலா பரிசத்'' என்ற தொகுதிக்காக் இடைத்தேர்தல் நடந்தது. இதில் சுயேச்சை வேட்பாளர் ஆஷா அருண் ஷோர் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அவருடைய தேங்காய் சின்னத்திற்கு வாக்களித்தால் பாஜக கட்சி வேட்பாளரின் தாமரை சின்னத்திற்கு ஓட்டு விழுந்து இருக்கிறது. தாமரை சின்னத்தில் விளக்கு எரிந்துள்ளது.

தேர்தல் நிறுத்தம்
இந்த நிலையில் அவர் தேர்தல் ஆணையத்தில் இதுகுறித்து குற்றச்சாட்டு வைத்தார். ஆனால் அவரது புகார் அப்போது எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் அடுத்தடுத்து வரிசையாக இப்படி பிரச்சனை இருக்கிறது என்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மக்கள் புகார் அளித்து இருக்கிறார்கள். இதனால் வாக்களிக்கும் எந்திரத்தில் கோளாறு என்று காரணம் கூறி தேர்தலை நிறுத்தியது தேர்தல் ஆணையம்.

விளக்கம்
இந்த தேர்தல் ஏன் நிறுத்தப்பட்டது என்று அணில் கல்காளி என்ற சமூக ஆர்வலர் சில நாட்கள் முன்பு, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தேர்தல் ஆணையத்திற்கும், அந்த பகுதி ஆட்சியருக்கும் கேள்வி எழுப்பி இருந்தார். அவர்கள் அளித்த விளக்கத்தில் '' தேர்தலில் யாருக்கு வாக்களித்தாலும் பாஜக கட்சிக்கு ஓட்டு விழுந்து இருக்கிறது, இதனால்தான் தேர்தலை நிறுத்தினோம் என்று அதிர்ச்சியூட்டும் தகவலை ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கு முன்பு
இந்த தகவல் வெளியே கொண்டு வந்த அணில் கல்காளி பேட்டி அளித்து இருக்கிறார். அதில் ''இந்த முறைகேடு பிப்ரவரி மாதம் நடந்து இருக்கிறது. ஆனால் தேர்தல் ஆணையம் இதை மறைத்துள்ளது. அதோடு அதற்கு நடந்த சில பேட்டிகளில், வாக்களிக்கும் எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என்று பொய்யாக பேட்டி அளித்துள்ளது. இதேபோல் இதற்கு முந்தைய தேர்தலிலும் முறைகேடு நடந்து இருக்கலாம்'' என்று குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications