குஜராத்.. காங்கிரஸ் கட்சிக்கு செமையாக கை கொடுத்த சவுராஷ்டிரா!
குஜராத்தில் இருக்கும் சவுராஷ்டிரா பகுதியில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.
அஹமதாபாத்: குஜராத்தில் இருக்கும் சவுராஷ்டிரா பகுதியில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. பட்டேல்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் பாஜக வெற்றி அடையவே அதிக வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தது.
குஜராத்தில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. காங்கிரஸ் 79 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.

ஆனால் பட்டேல்கள் அதிகம் வாழும் 11 மாவட்டங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது. சவுராஷ்டிரா பகுதி என்ற அழைக்கப்படும் இந்த பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கே மக்கள் அதிகம் ஆதரவு அளித்துள்ளனர்.
அங்கு இருக்கும் 53 இடங்களில் 31ல் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது. 22 இடங்களில் பாஜக வெற்றி பெற்று உள்ளது. ராஜ்கோட் போன்ற பட்டேல்கள் இருக்கும் பகுதியில் போட்டியிட்டதில், விஜய் ரூபானி போன்ற முக்கிய பாஜக தலைவர்கள் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
பட்டேல்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு அதிகம் இருந்த காரணத்தாலேயே இந்த வெற்றி கிடைத்து இருக்கிறது. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், இந்த பகுதியில் பாஜக வெற்றி பெறவே அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications